அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மடோனா (பொழுதுபோக்கு கலைஞர்)

Go down

மடோனா (பொழுதுபோக்கு கலைஞர்) Empty மடோனா (பொழுதுபோக்கு கலைஞர்)

Post by Admin Sat Dec 11, 2010 4:13 am

மடோனா (இயற்பெயர் மடோனா லூயிஸெ சிக்கோன்; ஆகஸ்டு 16, 1958) ஒரு அமெரிக்க இசைத்தட்டு கலைஞர், நடிகை, மற்றும் தொழிலதிபர் ஆவார். மிச்சிகன், பே சிட்டியில் பிறந்து மிச்சிகன், ரோசெஸ்டர் ஹில்ஸில் வளர்ந்த இவர், நவீன நடனத் துறைக்காக 1977 ஆம் ஆண்டில் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்தார். பிரேக்ஃபாஸ்ட் கிளப் மற்றும் எம்மி ஆகிய பாப் இசைக் குழுக்களின் ஒரு உறுப்பினராக இருந்தபின், தனது சொந்த தலைப்புடனான மடோனா என்னும் அறிமுக ஆல்பத்தை 1983 ஆம் ஆண்டில் சைர் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்காக செய்தார்.

அவரது ஸ்டுடியோ ஆல்பங்களான லைக் எவர்ஜின் (1984) மற்றும் ட்ரூ ப்ளூ (1986) ஆகியவற்றில் இருந்த தொடர்ந்த பல வெற்றி சிங்கிள்களை அடுத்து அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிட்டியது, பிரதான வகை இசையில் பாடல்வரிகளின் எல்லையை இன்னும் நெருக்கித் தள்ளும் பாப் அடையாளமாகவும் தனது இசை வீடியோக்களின் காட்சிப் பிம்பமாகவும் இவர் நிறுவப் பெற்றார், எம்டிவியில் இது கட்டாயம் இடம்பிடிப்பதானது.

இவருக்கு கிட்டிய அங்கீகாரம் டெஸ்பரேட்லி சீக்கிங் சுஸேன் (1985) திரைப்படத்தின் மூலம் புலப்பட்டது, இதில் இவர் நாயகியாக நடிக்கவில்லை எனினும் இது மடோனா வாகனம் என்பதாய் பரவலாய் காணப்பட்டதானது. லைக் எபிரேயர் (1989) கொண்டு மதரீதியான பிம்பத்தை பயன்படுத்துவதை மடோனா விரிவுபடுத்தியது அவரது பன்முகத்தன்மை கொண்ட இசை தயாரிப்புகளுக்கு நேர்மறையான விமர்சனத்தை அவருக்குப் பெற்றுத் தந்த அதே சமயத்தில் மத பழமைவாதிகள் மற்றும் வாடிகனிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது.

1992 ஆம் ஆண்டில் மடோனா மேவ்ரிக் கார்பரேஷன் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார், இது அவருக்கும் டைம் வார்னர் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும். அதே ஆண்டில் அவர், தனது படைப்புகளில் பாலியல் வெளிப்பாட்டையும் அதிகமாய் பயன்படுத்தத் துவங்கினார், எரோடிகா என்னும் ஸ்டுடியோ ஆல்ப வெளியீட்டில் இது துவங்கியது, அதன்பின் காபி மேஜை புத்தகம் செக்ஸ் வெளியிடப்பட்டது, அதன்பின் பாலுணர்வுக் காட்சிகள் கொண்ட த்ரில்லர் படமான பாடி ஆஃப் எவிடென்ஸில் நடித்தார், இவை எல்லாம் பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள் இரு தரப்பில் இருந்தும் எதிர்மறை வரவேற்பை பெற்றது.

1996 ஆம் ஆண்டில் எவிடா என்னும் படத்தில் மடோனா நட்சத்திர பாத்திரம் ஏற்றார், இப்படத்திற்காக அவர் ஒரு இசை அல்லது காமெடியில் நடித்த சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினை வென்றார். மடோனாவின் ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான ரே ஆஃப் லைட் (1998), மிகவும் விமர்சனரீதியாக போற்றப்பட்ட அவரது ஆல்பங்களில் ஒன்றாக ஆனது, அதன் பாடல்வரிகளின் ஆழத்திற்காக அது அங்கீகரிக்கப்பட்டது. 2000களில் மடோனா நான்கு ஸ்டுடியோ ஆல்பங்களை வெளியிட்டார், இவை அனைத்துமே பில்போர்டு 200 வரிசையில் முதலிட அறிமுகம் பெற்றது.

வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகி, 2008 ஆம் ஆண்டில் லைவ் நேஷன் நிறுவனத்துடன் மடோனோ பிரம்பிப்பூட்டும் 120 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மடோனா ஆல்பங்கள் உலகெங்கிலும் 200 மில்லியன் வரை விற்றுத் தீர்ந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டின் அதிக விற்பனையாகும் பாடல்களுக்கான பெண் ராக் கலைஞராகவும், 64 மில்லியன் சான்றிதழ் பெற்ற ஆல்பங்களுடன் அமெரிக்காவின் இரண்டாவது அதிக விற்பனையாகும் பாடல்களுக்குரிய பெண் கலைஞராகவும் ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேசன் ஆஃப் அமெரிக்கா இவருக்கு தரவரிசை வழங்கியுள்ளது. எல்லா காலத்திற்குமான உலகின் மிகப் பெரும் வெற்றிகரமான பெண் ரெக்கார்டிங் கலைஞராக கின்னஸ் உலக சாதனைகளுக்கான அமைப்பு இவரைப் பட்டியலிட்டிருக்கிறது.

2008 ஆம் ஆண்டில்,“பில்போர்டு ஹாட் 100 ஆல்-டைம் டாப் ஆர்டிஸ்ட்” பட்டியலில் பில்போர்டு இதழ் மடோனாவுக்கு இரண்டாம் இடம் அளித்தது, தி பீட்டில்ஸ் மட்டும் முன்னிருந்தது, இது அவரை பில்போர்டு ஹாட் 100 சார்ட் வரலாற்றில் மிக வெற்றிகரமான தனிப்பாடல் கலைஞராக அவருக்கு அங்கீகாரம் சூட்டியது.

அதே வருடத்தில் ராக் அன் ரோல் ஹால் ஆஃப்ஃபேமிலும் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.சமகால இசை உலகத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணிகளில் ஒருவராய் கருதப்படும் மடோனா, தொடர்ந்து தனது இசையையும் தனது பிம்பத்தையும் புதுப்பித்துக் கொள்ளும் திறனுக்கு பெயர் பெற்றவராய் இருக்கிறார், அத்துடன் இசைப்பதிவுத் துறையில் தனிமனித சுதந்திரத்திற்கான ஒரு நிர்ணயத்தையும் அவர் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஏராளமான இசைக் கலைஞர்களிடையே இவரது பாதிப்பு அறியப்பட்ட ஒன்றாய் இருக்கிறது.


மடோனா 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி மிச்சிகன், பே சிட்டியில் காலை 7:05 மணிக்குப் பிறந்தார், இவரது தாய் மடோனா லூயிஸெ (née Fortin) பிரெஞ்சு கனடா வம்சாவளியைச் சேர்ந்தவர், தந்தையான சில்வியோ சிக்கோன் முதல் தலைமுறை இத்தாலிய அமெரிக்க கிறைஸ்லர்ஃஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைப்பு பொறியாளர், இத்தாலியின் பாசெந்த்ரோ, அப்ரசோவைப் பூர்விகமாய்க் கொண்டவர். ஆறு குழந்தைகளில் மடோனா மூன்றாவதாய் பிறந்தார்; மார்டின், அந்தோணி, பவுலா, கிறிஸ்டோபர், மற்றும் மெலானி ஆகியோர் இவரது சகோதர சகோதரிகள். தாய் வழியில் இவர் ஸகாரி க்ளவுடியர் மற்றும் ழான் கியான் டு புஸான் (Zacharie Cloutier and Jean Guyon du Buisson) வம்சாவளியைச் சேர்ந்தவர்.

டெட்ராயிட்டின் புறநகர்ப் பகுதிகளான போன்டியாக் மற்றும் அவான் டவுன்ஷிப் (இப்போது ரோசஸ்டர் ஹில்ஸ்) பகுதிகளில் மடோனா வளர்க்கப்பட்டார். இவரது தாய் மார்பக புற்றுநோயால் 30வது வயதில் டிசம்பர் 1, 1963 அன்று மரணமடைந்தார். அதன்பின் இவரது தந்தை குடும்ப காப்பாளரான, ஜோன் குஸ்டஃப்சனை மணந்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன: ஜெனிபர் மற்றும் மரியோ சிக்கோன். தனது தந்தையின் இரண்டாவது திருமணம் குறித்து மடோனா இவ்வாறு கூறினார்:
“நான் வளர்ந்த சமயத்தில் எனது வளர்ப்புத் தாயை நான் ஏற்றுக் கொள்ளவில்லை... நினைத்துப் பார்க்கையில், அவரிடம் நான் சற்றுக் கடுமையாக நடந்து கொண்டதாய்த் தான் நான் நினைக்கிறேன்.” மடோனா செயிண்ட் ஃப்ரெடரிக்’ஸ் மற்றும் செயிண்ட் ஆண்ட்ரூ’ஸ் ஆரம்ப பள்ளிகளில் பயின்றார் (இரண்டாவது இப்போது ஹோலி பேமிலி ரீஜனல் ஸ்கூல் என அழைக்கப்படுகிறது), அதன்பின் வெஸ்ட் மிடில் பள்ளியில் பயின்றார். இங்கே இவரது அதிகமான GPAக்காகவும், இவரது “வித்தியாசமான” நடத்தையாலும் இவர் புகழ் பெற்றார், குறிப்பாக இவருக்கு ஒருவகை உள்ளாடை நுகர்வு மோகம் இருந்தது: வகுப்புகளுக்கு இடையே மடோனா கார்ட்வீல்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்டாண்ட்ஸ்களை பாதைகளிலேயே விளையாடிக் கொண்டிருப்பார், இடைவேளை சமயங்களில் மங்கி பார்களில் இருந்து தொங்கிக் கொண்டிருப்பார், வகுப்பு சமயத்தில் அவரது ஸ்கர்டை டக் செய்வதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார், பையன்கள் இவரது உள்ளாடைகளை காண முடியும்.

பின்னர், அவர் ரோசெஸ்டர் ஆடம்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார், அங்கு நேரடி-யு மாணவியாக ஆன அவர், உற்சாகக் குரல் எழுப்பும் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார். தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்ததும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடன ஸ்காலர்ஷிப் அவருக்குக் கிடைத்தது. பாலே கற்க விரும்பிய அவர் வகுப்புகளில் பங்கேற்க தந்தையை அனுமதிக்கச் செய்தார். அவரது பாலே ஆசிரியர் அவரை நடனத்தை தொழிலாக எடுக்க அவருக்கு ஆலோசனை வழங்கினார், எனவே 1977 ஆம் ஆண்டு முடிவில் தனது கல்லூரியை விட்டு விலகி இவர் நியூயார்க் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டார்.
அந்த சமயத்தில் மடோனாவிடம் அதிகம் பண வசதி இல்லை என்பதால் அவர் ஒரு அழுக்கடைந்த பகுதியில் வசித்தார், டங்கின் டூநட்ஸில் வெய்ட்ரஸ் ஆகவும் நவீன நடனக் குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தார்.

நியூயார்க் நகர்ந்தது பற்றி மடோனா கூறுகையில், “நான் விமானத்தில் பயணித்தது அதுதான் முதல்முறை, நான் வாடகை டாக்ஸியில் சென்றதும் அது தான் முதல்முறை. நான் இங்கு வரும்போது என் பையில் இருந்தது 35 டாலர் தான். நான் செய்த துணிச்சலான காரியம் அது."
பிரெஞ்சு டிஸ்கோ கலைஞரான பாட்ரிக் ஹெர்னாண்டஸ{க்காக அவரது 1979 உலகப் பயண சமயத்தில் ஒரு நடனக் கலைஞராக மேடையேறிய சமயத்தில், மடோனா இசைக் கலைஞரான டான் கில்ரோய் உடன் காதல் உறவு கொண்டிருந்தார், அவருடன் சேர்ந்து பின்னர் தனது முதல் ராக் குழுவான தி பிரேக்ஃபாஸ்ட் கிளப் குழுவை நியூயார்க்கில் உருவாக்கினார். குழுவுக்காக பாடியதோடு டிரம்கள் மற்றும் கிதாரும் வாசித்த அவர் குவீன்ஸ், கரோனாவில் ஸ்டுடியோவாக மாற்றப்பட்ட தலம் ஒன்றில் வசித்தார். ஆயினும் அவர்களிடம் இருந்து பிரிந்த அவர் 1980 ஆம் ஆண்டில் எம்மி என்கிற இன்னொரு இசைக்குழுவை, டிரம்மரும் முன்னாள் ஆண் நண்பருமான ஸ்டீபன் ப்ரே உடன் சேர்ந்து உருவாக்கினார்.

இவரும் ப்ரேயும் சேர்ந்து நடனப் பாடல்களை எழுதி தயாரித்தனர், இவை நியூயார்க் நடன கிளப்கள் இடையே இவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. டிஜேயும் ரெக்கார்டு தயாரிப்பாளருமான மார்க் கமின்ஸ் இவரது காட்சி இசைப்பதிவுகளில் ஈர்க்கப்பட்டார், எனவே இவரை சைர் ரெக்கார்ட்ஸ் நிறுவனரான செய்மோ ஸ்டீன் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மடோனா வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லேபலான சைர் ரெக்கார்ட்ஸ்க்கு சிங்கிள்ஸ் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.எவரது முதல் வெளியீடு ஏப்ரல் 24, 1982 இல் வெளிவந்த “எவ்ரிபடி” ஆகும்.

அவரது அறிமுக ஆல்பமான மடோனா பிரதானமாக ரெக்கி லூகாஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. அதே காலத்தில், அவருக்கு கலைஞரான ழான் - மைக்கேல் பாஸ்குயாட் உடன் தொடர்பு ஏற்பட்டது,
அவரது லாஃப்டில் சில காலம் அவருடன் வசித்து வந்த இவர் டிசம்பர் 82-ஜனவரி 83 வரையான காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு பயணம் செய்து வந்தார். அதன் பின் போதை மருந்து பயன்படுத்தியது மற்றும் வீட்டிற்கு தாமதமாய் திரும்பியது ஆகிய காரணங்களால் விரைவில் அந்த கலைஞரைப் பிரிந்து விட்ட அவர், பின் அந்த ஆல்பம் வளர்ச்சியுற்று வந்த சமயத்தில் இசைக் கலைஞரான ஜான் “ஜெல்லிபீன்” பெனிடெஸ் உடன் தொடர்புற்றார்.

மெதுவாய் மடோனாவின் தோற்றமும் ஆடையணியும் பாங்கும், மேடை நிகழ்ச்சிகளும் மியூசிக் வீடியோக்களும், இளம் பெண்கள் மற்றும் இளைஞிகள் இடையே பெரும் செல்வாக்கு பெறத் துவங்கின.
பெருமளவில் நளின மற்றும் நகை வடிவமைப்பாளரான மரிபோல் உருவாக்கியதான மடோனாவின் ஆடைப் பாங்கு - லேஸ் டாப்ஸ், கேப்ரி பேண்டுகளுக்கு மேலமையும் ஸ்கர்ட்டுகள், ஃபிஷ்நெட் ஸ்டாக்கிங்குகள், கிறிஸ்தவ சிலுவை சுமக்கும் நகை, பல பிரேஸ்லெட்டுகள், மற்றும் பிளீச் செய்த முடி - எல்லாமே 1980களில் பெண்களுக்கான நாகரிக அடையாளமாக ஆனது.

அடுத்து வந்த அவரது ஆல்பமான லைக் எ வர்ஜின் (1984) பில்போர்டு 200 பட்டியலில் அவரது முதல் முதலிட ஆல்பமானது.இதன் தலைப்பு பாடலான “லைக் எ வர்ஜின்” இந்த ஆல்பத்தின் வர்த்தகரீதியான வெற்றிக்கு பெரும் ஊக்கம் தருவதாய் அமைந்தது, இது பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் ஆஃப் அமெரிக்காவிடம் இருந்து வைர சான்றிதழ் பெற்ற இந்த ஆல்பம் உலகளவில் 21 மில்லியன் பதிப்புகளுக்கும் அதிகமாய் விற்றது.

அப்போது தனது அடையாளமாய் இருந்த “பாய் டாய்” பெல்ட்டை அணிந்து கொண்டு முதலாவது எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் விழாவில் மடோனா இந்த பாடலை நிகழ்ச்சியில் பாடிக்காட்டினார்.எம்டிவி வரலாற்றின் நினைவில் நிற்கும் தருணங்களில் இந்த நிகழ்ச்சியும் ஒன்றாகக் கருதப்படுகிறது,
அதே சமயத்தில் லைக் எ வர்ஜின் ஆல்பத்தை, எல்லா காலத்திற்கும் கட்டாயமான 200 ஆல்ப பட்டியலில் ஒன்றாக நேஷனல் அசோசியேசன் ஆஃப் ரெக்கார்டிங் மெர்க்கண்டைசர்ஸ் மற்றும் ராக் அன் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலிட்டது.

அடுத்த வருடத்தில், விஷன் குவெஸ்ட் என்கிற படத்தில் ஒரு கிளப் பாடகராய் கொஞ்ச நேரம் தோன்றி வெகுஜன திரைப்பட உலகில் மடோனா காலடி எடுத்து வைத்தார். அதன் இசைத்தடத்தில் அவரது இரண்டாவது அமெரிக்காவின் முதலிட சிங்கிளான “கிரேசி ஃபார் யூ” இடம்பெற்றிருந்தது.

டெஸ்பரேட்லி சீக்கிங் சூஸன் என்கிற காமெடிப் படத்திலும் அவர் தோன்றினார், இந்த படம் தான் “இன்டூ தி க்ரூவ்” பாடலை அறிமுகப்படுத்தியது, இது இங்கிலாந்தில் இவரது முதலிட சிங்கிளாக அமைந்த பாடலாகும். இந்த படத்தில் நாயகி வேடத்தில் நடிக்கவில்லை என்றாலும், மடோனா வாகனம் என்பதாய் இந்த படம் பார்க்கப்படும் (சந்தைப்படுத்தப்படும்) அளவுக்கு அவரது பாத்திரம் விவரிக்கப்பட்டிருந்தது.
இந்த படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீசர் விருதிற்கு பரிந்துரை செய்யப் பெற்றது, அத்துடன் தி நியூயார்க் டைம்ஸ் திரைப்பட விமர்சகரான வின்சன்ட் கேன்பி இந்த திரைப்படத்தை 1985 ஆம் ஆண்டின் பத்து சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வர்ணித்தார்.

நாயகி ரோசனா அர்குவெட் உடன் நடித்த படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான டீயுகுவுயு விருதினை வென்றார். “மெட்டீரியல் கேர்ள்” மியூசிக் வீடியோ படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் சீன் பென்னை டேட்டிங் செய்து வந்த இவர் அதே வருடத்தில் தனது இருபத்தி ஏழாவது பிறந்தநாளில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தி வர்ஜின் டூர் என்கிற பெயரில் வட அமெரிக்காவில் தனது முதல் கச்சேரிப் பயணத்தில் மடோனா இறங்கினார், துவக்கமாக பீஸ்டி பாய்ஸ் நிகழ்ச்சி அமைந்தது.

ஜூலை 1985 இல், பென்ட்ஹவுஸ் மற்றும் பிளேபாய் இதழ்கள் நியூயார்க்கில் 1978 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மடோனாவின் நிர்வாணப் புகைப்படங்கள் ஏராளமானவற்றை வெளியிட்டன. பணத்திற்கு சிரமப்பட்ட காலத்தில் மடோனா இந்த புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார்.

ஆனால் உரிய வெளியீட்டு படிவங்களில் அவர் கையெழுத்திட்டு இருந்ததால், அவற்றை தடுப்பதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எதனையும் அவரால் எடுக்க முடியவில்லை.

இந்த வெளியீடு ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியது. ஆயினும், ஒரு அமர்வுக்கு வெறும் 25 டாலர் மட்டும் கொடுத்து தான் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதற்கு அவர் எந்த வித எதிர்ப்போ வருத்தமோ தெரிவிக்காது தொடர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் இறுதியாய் 100,000 டாலர்களுக்கு விற்கப்பட்டன.

இந்த சம்பவத்தை அவுட்டோரில் நடந்த லைவ் எய்ட் மனிதநேய கச்சேரி நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார். தனது ஜாக்கெட்டை தான் கழற்ற விரும்பவில்லை ஏனென்றால் “அடுத்து பத்து வருடங்களுக்கு அவர்கள் ஜஊடகங்கள்ஸ எனக்கு எதிராக அதனைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்” என்றார் அவர்.

ஒரு கலைஞராக, மடோனாவின் இசை விமர்சகர்களிடையே கடுமையான ஆய்வுக்குட்பட்டதாய் இருந்து வந்திருக்கிறது. கான்டெம்ப்ரரி ஸ்ட்ராடஜி அனலிசிஸ் (2005) என்கிற தனது புத்தகத்தில் அதன் ஆசிரியர் ராபர்ட் எம்.கிராண்ட் கூறுகையில் மடோனாவுக்கு வெற்றி தேடித் தந்தது “நிச்சயமாக அவரது பிறவித் திறன் அல்ல.

ஒரு பாடல் கலைஞராக, இசைக் கலைஞராக, பாடலாசிரியராக, அல்லது நடிகையாக, மடோனாவின் திறமைகள் சிறந்தவை என்கிற அளவில் தான் இருக்கின்றன” என்கிறார். மடோனாவின் வெற்றி அவர் பிறரது திறமைகளில் நம்பிக்கை கொள்வதில் தான் அடங்கியிருப்பதாக உறுதிபடக் கூறும் இந்த ஆசிரியர், அவரது தொழில்வாழ்க்கையை மறுகண்டறிவு செய்வதில் அவரது அந்தரங்க உறவுகள் மைல்கற்களாக சேவையாற்றியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்

இதற்கு மாறாக ரோலிங் ஸ்டோனோ மடோனா “ஹ_க்குகள் மற்றும் அழிக்கவியலாத பாடல்வரிகளை வரப் பிரசாதமாய் பெற்ற ஒரு அற்புத பாடலாசிரியர், அத்துடன் அவரது நேரலை அதிசயங்கள் சான்றளிப்பதைக் காட்டிலும் ஒரு மேம்பட்ட ஸ்டுடியோ பாடகர்” என்கிறது. அவர் ஒரு “கனமான பாடல் திறமைசாலி” அல்ல என்றாலும் “காற்றினும் மெல்லிய பாடல்களைப் பாடுவதற்கான செதுக்கிய வாய்ப்பாட்டு கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார்.

1985 ஆம் ஆண்டில், தன்னை முதன்முதலில் வலிமையாய் கவர்ந்த பாடலாக நான்சி சினட்ராவின் “தீஸ் பூட்ஸ் ஆர் மேட் ஃபார் வாக் இன்” பாடலை மடோனா குறிப்பிட்டார், அதுவே அவரது “தலைமையேற்கும் மனோபாவத்தை” சுருங்கக் கூறுவதாய் அமையும் என்றும் தெரிவித்தார்.

ஒரு இளம் பெண்ணாக இலக்கியம், கலை, மற்றும் இசை ஆகிய துறைகளில் தனது ஆர்வத்தை விரிவாக்க அவர் முயற்சி கொண்டார், இந்த சமயத்தில் தான் அவருக்கு மரபு இசையில் ஆர்வம் பிறந்தது. தனக்கு பிடித்தமான பாணி பரோக் என்று குறிப்பிட்ட அவர், மோசார்ட் மற்றும் சோபின் மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர்களது “பெண்மை பண்பு” தனக்கு பிடித்தமாய் அமைந்திருந்தது என்று தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டில், தன் மீது பாதிப்பை ஏற்படுத்திய காரென் கார்பென்டர், தி சுப்ரீம்ஸ் மற்றும் லெட் ஸெப்லின் போன்ற இசைக்கலைஞர்களையும், மார்தா கிரஹாம் மற்றும் ருடோல்ப் நுரெயெவ் ஆகிய நடனக் கலைஞர்களையும் மடோனா அடையாளம் காட்டினார்.

தி அப்சர்வருக்கு 2006 ஆம் ஆண்டில் அளித்த பேட்டியின் போது, மடோனா தற்போதைய இசை விருப்பங்களையும் அடையாளம் காட்டினார், டெட்ராயிட் குழுவினரான தி ரகோன்டிர்ஸ் மற்றும் தி ஒயிட் ஸ்ட்ரைப்ஸ், மற்றும் நியூயார்க் குழுவான தி ஜெட் செட் ஆகியவை இதில் அடக்கம்.
மடோனாவின் கத்தோலிக்க பின்புலமும் அவரது பெற்றோருடன் அவருக்கிருந்த உறவும் லைக் எ பிரேயர் ஆல்பத்தில் பிரதிபலித்தது.

அவரது தொழில்வாழ்க்கையில் மதம் கொண்டிருந்த பாதிப்பை நினைவுகூருவதாகவும் அது இருக்கிறது. தலைப்பு இசைத் தடத்திற்கான அவரது வீடியோவில் ஸ்டிக்மாடா போன்ற கத்தோலிக்க அடையாளங்கள் இடம்பெற்றிருந்தன. தி வர்ஜின் டூர் சமயத்தில், இவர் ஒரு ஜபமாலையை அணிந்திருந்தார் என்பதோடு “லா ஐலா போனிடா”வுக்கான மியூசிக் வீடியோவில் அதனைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்.
தன்னுடைய வேலையிலும் தனது இத்தாலிய பாரம்பரியத்தை அவர் குறிப்பிடுகிறார். “லைக் எ வர்ஜின்” வீடியோ வெனிசிய அமைப்பு அம்சங்களைக் கொண்டிருந்தது. “ஓபன் யுவர் ஹார்ட்” வீடியோவில் அவரது பாஸ் அவரை இத்தாலிய மொழியில் திட்டுவதைக் காணலாம். அவரது ஹ_ஸ் தேட் கேர்ள் பயணத்தின் வீடியோ வெளியீடு சியோ, இத்தாலியா! - லைவ் ஃபிரம் இத்தாலி யில் “பாபா டோண்ட் ப்ரீச்” என்கிற பாடலை அவர் போப்புக்கு அர்ப்பணித்தார் (”பாபா” என்பது “போப்” என்பதற்கான இத்தாலிய வார்த்தையாகும்.)

தனது இளமைப்பருவத்தில், மடோனா நடிகர்கள் மீது மிகுந்த அபிமானமுற்றவராய் இருந்தார், அவர் பின்னாளில் இவ்வாறு கூறினார்: “கரோல் லோம்பார்ட், ஜூடி ஹோலிடே மற்றும் மர்லின் மன்றோ ஆகியோர் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அனைவரும் நம்ப முடியாத அளவு உற்சாகமாய் இருப்பார்கள்....அவர்களில் நான் என்னையே கண்டேன்....எனது பெண்பிள்ளைத்தனத்தை, எனது அறிவை, மற்றும் எனது அப்பாவித்தனத்தை”.

மடோனாவின் “மெட்டீரியல் கேர்ள்” மியூசிக் வீடியோ ஜென்டில்மேன் ப்ரஃபர் ப்ளான்டெஸ் படத்தில் மன்றோவின் “டையமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்’ஸ் பெஸ்ட் ஃபிரண்ட்” என்பதில் இருந்து மறு உருவாக்கம் செய்ததாகும், பின்னாளில் தனது ஹ_ஸ் தேட் கேர்ள் படத்திற்கு தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் 1930களின் ஸ்க்ரூ பால் நகைச்சுவைகளை, அதிலும் குறிப்பாக லோம்பார்டின் நகைச்சுவையை, ஆய்வு செய்தார். ”எக்ஸ்பிரஸ் யுவர்செல்ஃப்”க்கான (1989) வீடியோ ஃப்ரிட்ஸ் லேங்கின் ஊமைப் படமான மெட்ரோபோலிஸ் (1927) பாதிப்பில் உருவானதாகும். ”வாக்” வீடியோ ஹாலிவுட் கவர்ச்சி புகைப்படக் கலைஞர்களின், குறிப்பாக ஹோர்ஸ்ட் பி. ஹோர்ஸ்டின், பாணியை மறு உற்பத்தி செய்ததோடு மர்லீன் டயட்ரிச், கரோல் லோம்பார்டு மற்றும் ரீடா ஹேவோர்த் ஆகியோரின் போஸ்களை பின்பற்றிய வகையில் அமைந்திருந்தது, பாடல் வரிகளில் மடோனாவைக் கவர்ந்த,ஜ198ஸ பெட் டேவிஸ் (இவரை மடோனா ஒரு சின்னமாக வர்ணித்தார்), லூயிஸ் ப்ரூக்ஸ் மற்றும் டீடா பார்லோ ஆகியோர் உள்ளிட்ட, பல நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றன.

கலை உலகில் இருந்தும் அவரைப் பாதித்தவை உண்டு, குறிப்பாக ஓவியர் ஃப்ரிதா கஹ்லோவின் படைப்புகள் அவரைப் பாதித்தன.ஜ200ஸ “பெட்டைம் ஸ்டோரி”க்கான அவரது மியூசிக் வீடியோ கஹ்லோ மற்றும் ரெமெடியோஸ் வரோவின் ஓவியங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட படங்களைக் கொண்டிருந்தது.


”ஹாலிவுட்”டுக்கான அவரது 2003 வீடியோ புகைப்படக் கலைஞரான கை போர்டினது படைப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் அமைந்தது, ஆயினும் போர்டினது மகன் வழக்கு தொடுக்க இது இட்டுச் சென்றது, தனது தந்தையின் படைப்பு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாய் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.

ஆன்டி வரோல் போன்ற மற்ற புதுயுக ஓவியர்கள் “எரோடிகா” மற்றும் “டீப்பர் அன் டீப்பர்” ஆகியவற்றின் மியூசிக் வீடியோக்களுக்கு முன்மாதிரியாய் எடுத்துக் கொள்ளப்பட்டனர். தனது திரைமறைவுப் படங்களில் வர்ஹோல் பயன்படுத்திய ளுரூஆ சித்திரங்கள் இந்த வீடியோக்களில் பிரதிபலித்தன. வர்ஹோலுக்கு ஒரு காலத்தில் கலை தேவதையாய் திகழ்ந்த எடி செட்க்விக்கையும் கூட மடோனா தனது “டீப்பர் அன் டீப்பரில்” எதிரொலித்தார்.

1994 ஆம் ஆண்டில் தனது பெட்டைம் ஸ்டோரிஸ் ஆல்பம் வெளியீட்டிற்குப் பிறகு கபாலா யூத புதிர்வாத பள்ளியின் சீடராக மடோனா மாறினார். இந்த மதம் தன் மீது ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பேசியிருக்கும் இவர் நியூயார்க் மற்றும் லண்டனைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த மதப் பள்ளிகளுக்கு மில்லியன்கணக்கான டாலர்களை நன்கொடை அளித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டில், தனது பெயரை எஸ்தர் என்று இவர் மாற்றிக் கொண்டார், ஹ_ப்ரூ மொழியில் இதன் பொருள் “நட்சத்திரம்” என்பதாகும். ஆயினும் கபாலாவில் அவர் மூழ்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது, ரபிக்களிடம் இருந்து அவர் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருந்தது, அவர்கள் மடோனா அந்த மதத்தில் சேர்ந்ததை அவமதிப்பாகவும் பிரபலங்களின் பொழுதுபோக்கு விளையாட்டுத்தனமாகவும் கண்டனர்.


மடோனா (1983) லைக் எவர்ஜின் (1984) ட்ரூ ப்ளூ (1986)
லைக் எ ப்ரேயர் (1989) எரோடிகா (1992) பெட்டைம் ஸ்டோரிஸ் (1994)
ரே ஆஃப் லைட் (1998) மியூசிக் (2000) அமெரிக்கன் லைஃப் (2003)
கான்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர் (2005)ஹார்டு கேன்டி (2008)
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum