அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கமல் மனதை கவர்ந்த கதாபாத்திரம்

Go down

கமல் மனதை கவர்ந்த கதாபாத்திரம்  Empty கமல் மனதை கவர்ந்த கதாபாத்திரம்

Post by VeNgAi Mon May 02, 2011 4:32 pm

'மன்மதன் அம்பு' படத்துக்குப் பின் செல்வராகவன் இயக்கும் 'விசுவரூபம்' படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது.
அமெரிக்காவில் நடக்கும் கதை என்பதால் அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். இதற்காக படக்குழுவினர் அமெரிக்கா புறப்பட தயாரானார்கள்.

ஆனால் அமெரிக்காவில் படப்பிடிப்புக்கான படபிடிப்புத்தடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கு "விசா" கிடைக்கவில்லை.

இதையடுத்து படம் கைவிடப்பட்டது. செல்வராகவன் "இரண்டாம் உலகம்" படத்தை இயக்க போய் விட்டார். கமல் புதிதாக எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற "டிராபிக்" தமிழாக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

கதை ரொம்ப பிடித்தது. எனவே இதில் நடிக்க ஆசைப்படுகிறேன். மலையாளத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் தமிழில் நடிக்க வைப்பேன்.

ரகுமான் நடித்த வேடத்தில் மட்டும் நான் நடிப்பேன். அந்த கதாபாத்திரம் என் மனதை பாதித்தது என்றார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum