அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முத்துக்கு முத்தாக | திரை விமர்சனம் |

Go down

முத்துக்கு முத்தாக | திரை விமர்சனம் |  Empty முத்துக்கு முத்தாக | திரை விமர்சனம் |

Post by VeNgAi Mon May 02, 2011 4:34 pm

பெற்றோரை பொக்கிஷமாக நினைத்து நல்லபடியாக பார்த்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம்.

படம் முழுக்க ஒரே நட்சத்திர பட்டாளம், சோகத்தையும், பாசத்தையும் பிழியும் கதாபாத்திரங்கள் என இயக்குநர் ராசுமதுரவனின் ரெகுலர் பார்மட் படம் என்றாலும், சொல்ல வந்ததை பளிச்சென்று சொல்லி, சொல்ல வந்த கருத்தை ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியவைத்ததற்கு பாராட்டி, பார்க்க வேண்டிய படமாக அமைந்திருக்கிறது 'முத்துக்கு முத்தாக'.

ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்று, அவர்களை வளர்த்த பெற்றொர் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு மருமகள் என்ற புது உறவால் உதாசினப்படுத்தப்பட்டு தனிமையில் வாடும் ஒரு பெற்றொரின் சோகமான கதைதான் படத்தின் மையக்கரு.

திருமணமான புதுபெண்ணுக்கு கணவனை எப்படி முந்தானையில் முடியவேண்டும் என்று சொல்லிகொடுக்கும் அம்மாக்கள் ஒரு பக்கம், தன் மாமியாறுக்கு இருக்கும் காசநோய் தன் பிள்ளைக்கு ஒட்டிகொள்ளும் என்று நினைத்து குழந்தையை பாட்டியிடம் இருந்து பிரிக்கும் மருமகள், கடைசிகாலத்தில் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் தங்கலாம் என்று நினைக்கும் பெற்றொரை துரத்தும் மருகள் என சமூகத்தில் நடக்கும் சம்பவங்களையே காட்சிகளாக்கி கண் கலங்கவைத்திருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தில் நாயகன், நாயகி என்றால் அது சரண்யா பொன்னவன்னன், இளவரசு ஆகியோர்தான். சரண்யாவை இதுபோன்ற அம்மா வேடத்தில் பல படங்களில் பார்த்திருந்தாலும், அவ்வப்போது ஒரு புதிய அம்மாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.

ஐந்து பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் இளவரசுவின் நடிப்புக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும். அதுவும் இறுதிகாட்சியில் விஷ சாப்பாட்டை சாப்பிடும் இளவரசுவின் நடிப்புக்கு நூத்துக்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம்.

நட்ராஜ், விக்ராந்த், ஹரீஸ், ஓவியா, மோனிகா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலியின் காமெடி அவ்வப்போது ரசிகர்களை இலைபாற செய்கிறது.படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார். கவி பெரியதம்பியின் இசையில் பாடல்கள் புரியும் விதத்தில் அமைந்திருக்கிறது. மூன்று பைட், ஐந்து பாடல் என்ற கமர்ஷியல் படங்களுக்கிடையே, இதுபோன்ற வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் வெற்றிப்பெற்றால் தமிழ் சினிமா வெற்றிபெறும். படத்தின் தலைப்பை போலவே முத்துக்கு முத்தான படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ராசுமதுரவன் முத்தான வெற்றியை பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum