அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போர் மூண்டால் இந்திய ராணுவம் 10 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.

Go down

போர் மூண்டால் இந்திய ராணுவம் 10 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது. Empty போர் மூண்டால் இந்திய ராணுவம் 10 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.

Post by Admin Fri Apr 06, 2012 3:07 pm

இந்திய ராணுவத் தலைவர் வி கே சிங் சில நாட்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் கசிந்தது. இந்த கடிதம் கசிந்தவுடன் அதில் எழுதியிருந்த விடயங்கள் நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாகியது. ராணுவத் தளவாடங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற தகவலை வி.கே. சிங் தெரிவித்திருந்தார். பின்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ராணுவம் டெல்லியை நோக்கி நகர்ந்தது என்று ஒரு தகவல் வெளியிட்டது. ராணுவப் புரட்சிக்கு இந்திய ராணுவம் முயன்றதா என்ற நகைச்சுவை செய்தியும் வெளிவந்தது.

இந்நிலையில் ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்று இன்னொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் போர் வரும் பட்சத்தில், இந்திய ராணுவத்திற்கு போதுமான அளவில் வெடிப் பொருட்கள் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளது. மீறிப்போனால் 10 நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் அளவிற்கு தான் இந்தியாவிடம் வெடிப் பொருட்கள் இருக்கும் என்றும் அதற்கு பின் போரை நடத்துவதற்கு தேவையான வெடிப் பொருட்கள் இல்லை எனவும் இந்த தகவல் கூறியுள்ளது . 2009 ஆம் ஆண்டில் ராணுவத்தின் வெடிப்பொருட்கள் 6 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காத நிலையில் இருந்தது எனவும் செய்திகள் வந்துள்ளது.

முழு வீச்சில் போர் மூளுமானால் 1.27 நாட்களுக்கு தான் சில வகை ஆயுதங்களுக்கு வெடிப் பொருட்கள் இருக்கின்றன என்னும் தகவலும் கசிந்துள்ளது. எனினும் ரஷ்யாவிடம் மேலும் 16 , அடுக்குகள் வெடிப் பொருட்கள் வாங்குவதற்கு இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ராணுவம் 2008 ஆம் ஆண்டு கொடுத்த தகவலின் படி 120 mm மோர்டார் வெடிகுண்டுகள் 7 .43 நாட்களுக்கு தான் தாக்குப் பிடிக்கும் எனவும், துப்பாக்கிக் களுக்கு தேவையான வெடிபொருட்கள் 4 .65 நாட்களுக்கு தான் தாக்குப் பிடிக்கும் எனவும் ராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது.

இதை விடக் கொடுமை என்னவென்றால் இந்திய ராணுவத்திற்கு கொடுக்கப்படும் பெரும்பாலான வெடிப் பொருட்கள் வெடிக்காத நிலையில் தான் உள்ளது எனவும் , 86,௦௦௦ அடுக்குகள் 125 mm வெடிப் பொருட்கள் பழுதாகியுள்ளது அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உலகில் இரண்டாம் நிலையில் உள்ள , இருபது லட்சத்திற்கும் மேல் வீரர்களை கொண்ட இந்திய ராணுவப் படையில் பழுதடைந்த ராணுவத் தளபாடங்களும், வெடிக்காத வெடி பொருட்களும் , அப்படியே வெடித்தாலும் பத்து நாட்களுக்கு மேல் வெடிப் பொருட்கள் இருப்பு இல்லாத நிலையிலும் தான் இந்திய ராணுவம் இருக்கிறது என்ற அதிர்ச்சிகர தவகல் இப்போது வெளியாகி உள்ளது.
போர் மூண்டால் இந்திய ராணுவம் 10 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது. Indian-army36191e
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» தண்ணீரின் மேல் நடக்கலாம்
» அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
» அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
» போர் நடைபெற்ற பகுதிகளில் மேலதிக இராணுவப் பிரசன்னம் குறித்து கோத்தபாயவுடன் பேசினோம் - ஐ.ஒன்றிய குழு தலைவர் ஜீன் லம்பேர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum