அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஒசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி

Go down

ஒசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி Empty ஒசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி

Post by theepan Wed Feb 16, 2011 5:53 am

காதலர் தினத்தை (பிப்ரவரி 14) முன்னிட்டு ஒசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜா கொய்மலர் (ஸ்ரீன்ற் ச்ப்ர்ஜ்ங்ழ்) ஏற்றுமதி மண்டலம் ஒசூர் வட்டம் அமுதகொண்டபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.
இங்கு 250 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு நிறுவனமான டிட்கோ, நசீம் அகமது அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து டான்ஃபுளாரா ரோஜா மலர் ஏற்றுமதி மண்டலம் அமைத்துள்ளது.

டான்ஃபுளாரா மூலம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் அரபு நாடுகளுக்கு விமானம் மூலம் ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சாதாரண நாட்களில் ஒரு ரோஜா பூவின் விலை ரூ. 2. அதுவே காதலர் தினத்தில் ஒரு பூவின் விலை ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 பூக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் இங்கிருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்
» அஜித்தின் மங்காத்தா
» ஐ.பி.எல். ஏலத்தில் லாரா : 18 வெளிநாட்டு வீரர்களுக்கு ரூ.1.8 கோடி நிர்ணயம்
» அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது
»  தனிமையில் இருந்து நினைக்கும்போது,,,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum