அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலக கிண்ணப் பயிற்சி போட்டி: இங்கிலாந்து வெற்றி

Go down

உலக கிண்ணப் பயிற்சி போட்டி: இங்கிலாந்து வெற்றி Empty உலக கிண்ணப் பயிற்சி போட்டி: இங்கிலாந்து வெற்றி

Post by theepan Fri Feb 18, 2011 6:27 am

கனடா அணிக்கு எதிரான உலக கிண்ணப் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பத்தாவது உலக கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரும் 19 ம் தேதி துவங்குகிறது. இதற்காக வங்கதேசத்தில் நடந்த பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கெப்டன் ஸ்டிராஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு டிராட்(54), மட் பிரையர்(78), கெவின் பீட்டர்சன்(24) மற்றும் பிராட்(22) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 49.4 ஓவரில், 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கனடா சார்பில் குர்ரம் கோகன், ஹர்விர் பெய்டுவான் தலா 3, ஹென்றி ஒசின்டே 2 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கனடிய அணிக்கு ரிஜ்வான் சீமா(93), குர்ரம் கோகன்(44), ஜூபின் சர்காரி(22) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற கனடா அணி 46.1 ஓவரில், 227 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 5, அஜ்மல் செஷாத் 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடக்கும் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum