அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பிரதர்ஸ் பினாமியின் முதல் படம்

Go down

பிரதர்ஸ் பினாமியின் முதல் படம் Empty பிரதர்ஸ் பினாமியின் முதல் படம்

Post by theepan Thu Mar 03, 2011 6:31 am

பிரதர்ஸ் பினாமியின் முதல் படம் Karthisurya_002சிறு படங்களையும் விநியோகம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சூர்யா கார்த்தி குரூப்.
இவர்களது நெருங்கிய உறவினாரான ஞானவேல் ராஜாவைதான் இப்படி குரூப் என்று குறிப்பிட்டோம். கார்த்தி, சூர்யா இருவரையும் மாறி மாறி நடிக்க வைத்து படங்கள் தயாரித்து வருகிறார் இவர்.
பிரதர்ஸ் பினாமியின் முதல் படம் Surya_karthi001இதுவே கோடம்பாக்கத்தில் பலருக்கும் புகைச்சலை கிளப்பி வருகிறது. பொதுவாக ஹிட் பட ஹீரோக்கள், முக்கியமான நிறுவனங்களின் படங்களில் நடிக்க தானாகவே முன் வருவார்கள். ஏவிஎம், சிவாஜி புரடக்க்ஷன்ஸ், வாஹினி ஸ்டுடியோஸ் என்று இப்போதும் படம் எடுத்து வரும் அவர்களை சீண்டுவது கூட இல்லை இந்த பிரதர்ஸ்.
இன்று புதிதாக வந்திருக்கும் முன்னணி தயாரிப்பாளர்களையும் கண்டு கொள்வதில்லை. ஆனால் எல்லாமே ஞானவேல்ராஜாதான் என்று சரணாகதி அடைவதுதான் ஏன் என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறது திரையுலகம்.
இந்த ஞானவேல், சூர்யா, கார்த்தி பிரதர்சின் பினாமி என்றும் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் வெளி படங்களை வாங்கி விநியோகம் செய்ய முன் வந்திருக்கிறார் இந்த இளம் தயாரிப்பாளர்.
அதற்கு காரணம், தியேட்டர் முதலாளிகளுடன் நட்பு வைத்துக் கொண்டால் போதும் என்ற குறுகிய நோக்கம்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஞானவேல் ராஜாவின் முதல் வெளிப்பட விநியோகம் அன்வர் என்ற படத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறதாம். இந்த படத்தில் நடித்திருப்பது பிரகாஷ்ராஜும், பிருத்விராஜும்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum