அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிரிக்கெட் வெற்றி இராணுவத்துக்குச் சமர்ப்பணம் என்றால் தோல்வி புலிகளுக்குச் சமர்ப்பணமா?! சரவணபவன் - இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா?! மாவை கேள்வி

Go down

கிரிக்கெட் வெற்றி இராணுவத்துக்குச் சமர்ப்பணம் என்றால் தோல்வி புலிகளுக்குச் சமர்ப்பணமா?! சரவணபவன் - இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா?! மாவை கேள்வி  Empty கிரிக்கெட் வெற்றி இராணுவத்துக்குச் சமர்ப்பணம் என்றால் தோல்வி புலிகளுக்குச் சமர்ப்பணமா?! சரவணபவன் - இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா?! மாவை கேள்வி

Post by kaavalan Mon Apr 04, 2011 1:03 pm

உலகக் கிண்ணக் கிரிக்கெட் வெற்றியை போரில் மரணித்த இராணுவத்தினருக்குச் சமர்ப்பணம் செய்வதாகக் கூறிய அரசின் ஐ.நா.பிரதிநிதி, தோல்வியைப் புலிகளுக்குச் சமர்ப்பிக்கப் போகின்றாரா? என சரா எம்பியும், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என மாவை எம்பியும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஒரு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணராமல் பொறுப்பற்ற வகையில் நாட்டின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் இவ்வாறு பேசலாமா? என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

மல்லாகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை அலுவலகத்தில் கணினி, தையல் பயிற்சி நிலையங்களைக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவும், சரவணபவனும் கலந்து நாடாவை வெட்டி வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர்.

இந் நிகழ்வில் மல்லாகம் மற்றும் காங்கேசன்துறைப் பிரதேச அமைப்பாளரும் பிரசே சபை வேட்பாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேலும் கூறியவை வருமாறு:

அன்று தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காகப் படையினரால் அமைக்கப்பட்ட காவலரண்களைத் தகர்த்து அகற்றுவதற்கு நமது வரிப்பணமே செலவிடப்பட்டுள்ளது. மல்லாகம் உட்பட இப் பிரதேசங்களில் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவை அன்றும் ஜனாதிபதியின் "வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் தொண்டர் அமைப்புக்களின் மூலமே யாழ். மாவட்ட செயலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவற்றை நான் இப்பொழுதே உங்களுக்குக் கூறிவைக்கிறேன்.

இந்த வேலைத் திட்டங்கள் முடிவடைந்ததும் எல்லாவற்றையும் தாமே செய்தோம் எனக் கூறிக்கொண்டு மாயைபோட்டுக் கொண்டு வருவார் அமைச்சர் டக்ளஸ். அதற்கு நீங்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

இங்கு பிரதேச செலாளராக இருக்கும் ஒரு பெண் அதிகாரி டக்ளஸின் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவர்கள் சிவில் அதிகாரிகள். நாளை நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் இவர்களுடைய நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இப்பொழுது யாழ். பல் கலைக்கழகத்துக்கு சிறந்த நிர்வாகத் திறமையுடைய பெண்மணியான வசந்தி அரசரட்ணம் துணைவேந்தராக வந்துள்ளார். அவர் பதவியேற்றபின் பின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மிகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் பல விடயங்களைக் கூறி உள்ளார். அவர் நிச்சயமாக இம்மாவட்டத்தில் உள்ள பெண் நிர்வாக அதிகாரிகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வார் என்று நம்புகின்றேன் என்றும் சரவணபவன் எம்.பி. கூறினார்.

தொடர்ந்து சுன்னாகத்தில் அமைந்துள்ள கட்புலனற்றோர் பாதுகாப்பகமான "வாழ்வகத்திற்கும்" விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்த வாழ்வகத்தின் அபிவிருத்திக்காக தனது நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா? ஐ.நா. பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்றது - மாவை

இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என்று கண்டித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.

மாவை சேனாதிராசா தொடர்ந்து பேசுகையில்,

விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என்று யுத்த வெறியூட்டும் வகையில் கூறி உள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்துகொண்டு கிரிக்கெட் வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என்று கூறுகின்றார்.

இங்கே இவர்கள் இருவருமே உலகமே ஆவலுடன் அவதானித்த விளையாட்டுப் போட்டியை ஒரு யுத்தகளமாக்கி வெறியூட்டும் வகையில் பேசுகின்றனர். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என்று கேட்கின்றேன். அரசியல் நாகரிகமற்ற இக்கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அண்மையில் இங்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இங்குள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் முன்னிலையிலேயே கூறினார் 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று.அரசும் அமைச்சர்களும் அப்போது தலையாட்டிக் கொண்டி ருந்தனர். ஆனால், ஜனாதிபதியோ பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது; வழங்கமாட்டேன் என்று தன்பாட்டில் கூறிக் கொண்டு போகிறார்.

அதிகாரப்பரவல் எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள அரசு, எல்லா வகையிலும் எம்மை ஓரம் கட்டுகின்றது.

கல்வித்துறை என்றால் என்ன, ஏனைய எமது விடயங்கள் என்றால் என்ன மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகின்றனர்.

தென்பகுதியில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, யாழ்.பல்கலைக் கழகத்தை ஒதுக்கிவிட்டார். உயர் கல்வி அமைச்சுடன் பேசியதன் பயனாகவே இந்திய அரசின் உதவியுடன் யாழ்.பல்கலைக்கழகம் சீரமைக்கப்படவுள்ளது.

இன்று உலக நாடுகளில் கல்வித்துறை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்தும் கணினிமயமாகிவிட்டன. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய எமது கிராமங்களுக்கு அந்த வசதிகள் இல்லை.

சகல துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எமது சக்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டதால்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
» இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசிப்பதாக கூறப்படுவது தவறானது: கடற்படைப் பேச்சாளர்
» இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையினால் எல்லைக்கோடு
» திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வி அடையும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்
» யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum