அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! : தமன்னா

Go down

கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! : தமன்னா Empty கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! : தமன்னா

Post by devid Sat Dec 11, 2010 2:19 pm

நடிகர் கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம் என்கிறார் நடிகை தமன்னா. தமன்னாவிடம் தவறாமல் கேட்கும் கேள்விகளுள் ஒன்றாகிவிட்டது ‘கார்த்தியுடன் காதலா?’ என்பது.
இந்த முறையும் அப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்க கடுப்பான தமன்னா இப்படிக் கூறினார்.

எனக்கும், கார்த்திக்கும் காதல் இல்லை என்று பலமுறை மறுத்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. என்னையும், கார்த்தியையும் இணைத்து பேசுவதே முட்டாள்தனம்.

அவரோடு இரண்டு படம் நடிச்சிட்டா, காதல் வந்துடுமா… உடன் நடிக்கும் ஒரு நடிகர் அவர். அவ்வளவுதான். வேற எந்த உணர்வும் இல்லை. தயவு செய்து இதை எழுதுங்கள்.

சிறுத்தை என்ற படத்தில் அவருடன் நடிக்கிறேன். அந்தப் படம் முடிந்த பிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இதுதான் எங்களுக்குள் உள்ள உறவு. போதுமா..?” என்றார்.

கார்த்தியுடன் காதல் என்ற விவகாரத்தை தொடர்ந்து மீடியாவில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதற்காக அந்தப் படம் தொடர்பான சிலரே இப்படி பொய்யான செய்திகளை வெறும் பப்ளிசிட்டிக்காக பரப்பி வருகின்றனர் என ஏற்கென நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த மாதிரி வதந்திகளைத் தவிர்க்க இப்போதெல்லாம் தவறாமல் அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தன் பாட்டியை உடன் அழைத்துச் சென்றுவிடுகிறாராம் தமன்னா!

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! : தமன்னா Empty நானாக எதையும் தேடிப் போவதில்லை பிரபுதேவா

Post by devid Sat Dec 11, 2010 2:57 pm

நானாக எதையும் தேடிப் போவதில்லை. வருவதை விருப்பமாக ஏற்றுக் கொள்கிறேன், என்றார் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா.
மேலும், எனது தனிப்பட்ட விவகாரம்....
..குறித்து அளவுக்கு அதிகமாகவே விமர்சனங்கள் வருகின்றன. இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா என்றும் கேள்வி எழுப்பினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று மாலை நிருபர்களைச் சந்தித்தார் பிரபு தேவா. அவரது பிஆர்ஓ வி கே சுந்தர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தப் பேட்டியின் போது நயன்தாராவுடனான காதல் விவகாரம் குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரபுதேவா, “என்னைப்பற்றி கொஞ்சம் அதிகமாகவே செய்திகள் வருகின்றன. இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா என்று எனக்குத் தெரியவில்லை.

நான் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதில்லை. இதனால் இடை வெளி விழுந்த மாதிரி ஆகிவிட்டது. உண்மையில், பேசுகிற அளவுக்கு பெரிதாக நான் சாதித்து விடவில்லை. இனிமேல் அடிக்கடி சந்தித்து பேச முயற்சிக்கிறேன்.

என் வாழ்வில் பல விஷயங்கள் எதிர்பாராமல் நடந்து விட்டன. நான் இயக்குனரானதும் கூட அப்படித்தான்.

என் பாதை, பயணம் எல்லாமே எனது தனிப்பட்ட விருப்பமாக இல்லாமல் காலம் முடிவு செய்து அழைத்துப் போகிற மாதிரிதான் நடக்கிறது. இது எனக்குப் பிடித்துள்ளது.

நான் இப்போது இயக்குநர்தான். ஆனால் நடிக்கப் போய்விட்டால், அங்கு நான் இயக்குநர் என்பதை மறந்துவிடுவேன். ஒரு நடிகராகத்தான் இருப்பேன்.

நான் எதையும் தேடிப் போவது இல்லை. வருவதை விருப்பமாக ஏற்றுக் கொள்கிறேன்.

நான் இயக்கும் படங்களில் வேறு ஒருவரைதான் டான்ஸ் மாஸ்டராக போடுகிறேன். நான் இயக்கும் எங்கேயும் காதல் படத்துக்குக் கூட டான்ஸ் நான் இல்லை.

தங்கர்பச்சான் இயக்கும் களவாடிய பொழுதுகள் படத்தில் நடிக்கிறேன். அவர் கோபக்காரர். எதையும் விமர்சனம் செய்வார். இருந்தாலும் எங்களுக்குள் நட்பு உண்டு.

மிக அருமையான கதை அது. என்னுடைய கமர்ஷியல் இமேஜ் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டுத்தான் நடிக்கிறேன். அழகி மாதிரி இந்த படமும் பேசப்படும். சந்தோஷ் சிவனின் உருமி ஒரு வித்தியாசமான படம். என்னுடன் பிருத்விராஜ், ஜெனிலியா, நித்யாமேனன் நடித்துள்ளனர். எனக்கு மறக்க முடியாத படமாக இது அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் இயக்கும் எங்கேயும் காதல் ஜாலியான காதல் கதை. ஜெயம் ரவி ஹீரோ. அவர் டைரக்டரோட நடிகர். ஆண் மீது ஒரு பெண்ணுக்கு வரும் வழக்கமான காதல்தான் கதை. ஆனால் சொல்லியிருக்கும் விதம் உங்களுக்கு பிடிக்கும். பிரான்சில் முழுப் படத்தையும் முடித்துள்ளோம்.

கொஞ்சம் ஆக்ஷனும் இருக்கும். மாலை நேர தென்றல் காற்று மாதிரி ரசிகர்களை இப்படம் கவரும். அடுத்து விஷால் நடிக்கும் படமொன்றை இயக்க உள்ளேன்…” என்றார்.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum