அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை பாடல் வெளியீடு*~*

Go down

*~*கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை பாடல் வெளியீடு*~* Empty *~*கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை பாடல் வெளியீடு*~*

Post by Tamilkings Tue May 03, 2011 4:50 pm

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை பாடல் வெளியீடு


*~*கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை பாடல் வெளியீடு*~* Konjam%20Veyil%20Konjam%20Mazhai%20reel%203

இசையமைப்பாளர் பரணிக்கு தொடர் வாய்ப்புகள் இல்லை. என்றாலும் அவர் இசையமைக்கும் படங்கள் எல்லாமே அவரது இசைப்பணிக்கு 'தொடரும்...' போடுகிற வேலையைதான் செய்து வருகின்றன. சொற்ப இடைவெளிக்குப் பின் அவர் இசையமைக்கும் படம் 'கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை'. 'யாரடிச்சு அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை' என்றொரு பாடல் இருக்கிறது இப்படத்தில். இதை பாட தாய்மை நிறைந்த குரல் இருந்தால் பொருத்தமாக இருக்குமே என்று நினைத்தாராம். சட்டென்று அவர் மனதில் வந்து போனவர் மற்றொரு இசையமைப்பாளரான பரத்வாஜ். எவ்வித ஈகோவும் இல்லாமல் சட்டென்று ஒப்புக் கொண்ட பரத்வாஜ் 'பயணத்தின் போது கண்கள் மூடிக் கடக்க காதல் என்ன மைல் கல்லோ...' என்ற வரிகளை பாடும்போது லேசான விசும்பல் சவுண்டே வந்துவிட்டதாம் ரெக்கார்டிங் தியேட்டரில். படத்தின் இயக்குநர் ஏகாதசியே ஒரு பாடலாசிரியர் என்பதால் அவரே எல்லா பாடல்களையும் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இப்படத்தில் பரவாஜ் உட்பட நான்கு இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்களாம். பரணி, பவதாரிணி, கார்த்திக் ஆகியோர்தான் மற்ற மூவர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. தலைப்பை நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்த படக்குழுவினர், வந்திருந்த விருந்தினர்களுக்கு குடையை பரிசாக அளித்தார்கள். ஆனால் மழைதான் இல்லை நேற்று!

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum