அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மலையாளத்திலும் கலக்கப் போகிறார் - "வடிவேலு"

Go down

மலையாளத்திலும் கலக்கப் போகிறார் - "வடிவேலு" Empty மலையாளத்திலும் கலக்கப் போகிறார் - "வடிவேலு"

Post by devid Tue Dec 28, 2010 12:28 am


தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் வடிவேலு.
தமிழில் காமெடியில் கலக்கிய இவர், மலையாளத்திலும் கலக்கப் போகிறார்.

பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்திற்குப் போகும் திரையுலகினருக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அந்த வகையில் காமெடி நடிகர் வடிவேலுக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. 'அந்நியன்', 'தசாவதாரம்' உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இயக்குநர் சுனில் இயக்கத்தில் 'லக்கி ஜோக்கர்ஸ்' என்ற படத்தைத் தயாரிக்கிறார்.

இதில் பிரசன்னா நடிக்கிறார். இவருடன் இணைந்து காமெடியில் வடிவேலுவும் கலக்க இருக்கிறார்.

இயல்பாகவே காமெடி பண்ணும் வடிவேலுக்கு, தமிழ் மக்கள் ஆதரவு தந்தது போல், மலையாளத்திலும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வடிவேலு.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

மலையாளத்திலும் கலக்கப் போகிறார் - "வடிவேலு" Empty 'லட்சுமி' என்ற பெயரில் - "ப்ரியாமணி"

Post by devid Tue Dec 28, 2010 12:29 am

மும்பை தாக்குதல் சம்பவத்தைப் பற்றிய படத்தில் ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார்.
மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் பலர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார்.

இந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு கன்னடத்தில், 'லட்சுமி' என்ற பெயரில் படம் தயாராகிறது. இதில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ப்ரியாமணி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான கிளிப்பிங்க்ஸ், தகவல்களை பட இயக்குநர் ராகவ் லோகி சேகரித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே 'ஜோகயா' என்ற படத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.

அதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு 'லட்சுமி' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ப்ரியாமணியுடன் நடிக்கும் பாடல் காட்சியுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum