அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழில் மஹிந்த பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா - ஈழத்து சௌந்தரராஜன் கௌரவிக்கப்படவுள்ளார்

Go down

யாழில் மஹிந்த பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா - ஈழத்து சௌந்தரராஜன் கௌரவிக்கப்படவுள்ளார்  Empty யாழில் மஹிந்த பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா - ஈழத்து சௌந்தரராஜன் கௌரவிக்கப்படவுள்ளார்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:19 am

அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பொங்கல் விழா யாப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார்.
இதேவேளை தேசிய பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ் மாவட்ட அரச செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இதேவேளை 100 சிவாச்சாரியர்களும் 100 தவில் நாதஸ்வரக் கலைஞர்களும் தெரிவுசெய்யப்பட்ட 15 விவசாயிகளும் தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் வீரர்களும் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.

அதேவேளை, 2010, 2011ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட 50 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளதுடன், ஈழத்து சௌந்தரராஜன் என அழைக்கப்படும் அருள்ஜோதியும் கௌரவிக்கப்படவிருக்கின்றார்.

அத்துடன், வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கென புனரமைக்கப்பட்டு வரும் புதிய கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவிருக்கின்றார். இந்த பாடசாலைக்கு இலங்கை மின்சார சபை மூலம் மின்சாரமும் வழங்கப்படவிருப்பதுடன் 100 கதிரைகளும் வழங்கப்படவுள்ளன.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் சடலம் யாழில் மீட்பு
» யாழில் விசுவரூபம் எடுத்திருக்கும் ஆயுதக்குழுக்களின் கடத்தல்களும், படுகொலைகளும் - லங்கா கார்டியன்
» தேசிய தலைவரின் தாயார் காலமானார்
» யாழில் ஜனாதிபதியை ஆதரித்து ஆர்ப்பாட்டப் பேரணி! பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum