அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாத யாத்திரையில் காதல்: சகாக்கள் படத்தின் கதை

Go down

பாத யாத்திரையில் காதல்: சகாக்கள் படத்தின் கதை Empty பாத யாத்திரையில் காதல்: சகாக்கள் படத்தின் கதை

Post by theepan Thu Feb 17, 2011 6:34 am

'எம்டன் மகன்' பட டைரக்டர் திருமுருகனிடம் அசோசியேட்டாக பணியாற்றிய எல்.முத்துக்குமாரசாமி,வி.வி.வி. கிரியேசன்ஸ் தயாரிப்பில் 'சகாக்கள்' படத்தை இயக்கியுள்ளார்.
பழனிக்கு பாத யாத்திரை செல்லும் குழுவினரால் நாயகன் சஞ்சீவ், நாயகி அத்வைதா இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகின் கண்ணோட்டத்தில் பாடலின் சூழல் அமைந்துள்ளது.

இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதே என்ற பாடல் படக்குழுவினர் மட்டுமின்றி, பாடலை கேட்ட அனைவரையும் நெகிழ்வடைய செய்தது கைதட்டி பாராட்டியுள்ளார்கள்.

காதலர்களின் சகாக்களுக்கு இடையேயான அன்பு, பிரிவு, பிரச்சனைகள் போன்றவற்றை படத்தில் விவரித்துள்ளோம். சஞ்சீவ், அத்வைதா பங்குபெறும் பாடலை காரைக்குடி, பள்ளத்தூர், கண்டனூர், புது வயல் ஆகிய ஊர்களில் படமானது.

மேலும் கடைத்தெரு, கம்மாக்கரை,வயல்வெளி, அழகப்பா பல்கலைக்கழகதிலும் பல்வேறு லொக்கேசன்களிலும் படமாக்கப்பட்டுள்ளது என்கிறார் சகாக்கள் படத்தின் டைரக்டர் முத்துகுமாரசாமி.

இப்படத்தின் டூயட் பாடலை எஸ்.பி.பி.-பாடகி சித்ரா இருவரும் பாடிமுடித்த பின், ரிகார்டிங் தியேட்டரில் ஆனந்த கண்ணீர் விட்டதாக கூறுகிறார்கள்.

இதில் 'குளிர் நூறு டிகிரி' சஞ்சீவ், அத்வைதா, சங்கர், ஜெபி, சிவசங்கர், பானுமதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இசை-தயா ரத்னம், ஒளிப்பதிவு-ஸ்ரீ.எம்.அழகப்பன், எடிட்டிங்-ரமேஸ், கலை-மாயகண்ணன், வசனம்-பாஸ்கர் சக்தி, ஸ்டண்ட்-ஆக்ஸன் பிரகாஸ் மற்றும் பலர் பணியாற்றியுள்ளனர்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum