அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இத்தாலி பிரதமரின் பதவி பறிபோகும் அபாயம்

Go down

இத்தாலி பிரதமரின் பதவி பறிபோகும் அபாயம் Empty இத்தாலி பிரதமரின் பதவி பறிபோகும் அபாயம்

Post by theepan Fri Feb 18, 2011 6:16 am

செக்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீதான விசாரணையைத் துவக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 18 வயதுக்குக் குறைந்த கரிமா எல் மரூக் என்ற பெண்ணோடு உறவு வைத்துக் கொண்டார். மேலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில இளம் பெண்களுடன் உறவு கொண்டு அவர்களுக்கு அரசில் பதவிகளையும் வாங்கித் தந்தார்.

இதுகுறித்து அவரது சொந்த ஊரான மிலன் நகரில் அவர் மீது வழக்கு பதிவானது. அரசு தரப்பில் அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். ஆனால் தற்போது 18 வயதாகும் ரூபி, பெர்லுஸ்கோனி நடத்திய விருந்து ஒன்றில் கலந்து கொண்டதற்காக அவர் தனக்கு நான்கு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் தந்ததாகக் கூறினார்.

ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் மீதான வழக்கு விசாரணையை உடனடியாகத் துவக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் பெர்லுஸ்கோனியின் வக்கீல்கள் விசாரணையைத் துவக்க உத்தரவிடுவதற்கு அந்த நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டனர்.

இதையடுத்து விசாரணை நீதிபதி கிறிஸ்டினா டி சென்சோ ஏப்., 6ம் தேதி மிலன் நகரில் மூன்று பெண் நீதிபதிகள் முன்பு பிரதமர் மீதான விசாரணை துவக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற பலஸ்தீனர் விமானநிலையத்தில் கைது
» கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பதவி விலகுவேண் - கிழக்குமுதலமைச்சர்
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» கோத்தபாயவுக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம்?
» சஜித்துக்கு பிரதி தலைவர் பதவி! தவறும் பட்சத்தில் வாக்கெடுப்பு! - திஸ்ஸ அத்தநாயக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum