அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி

Go down

யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி  Empty யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி

Post by kaavalan Fri Feb 25, 2011 1:24 am

யுத்தம் முடிந்து விட்டது, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டாரென்றால் பிரபாகரனின் பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என தமிழர் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.
கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

காலை 10.30 மணியளவில் இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள த.தே.ம.மு வின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மகாநாடு நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 20-02-2011 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டு அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குரிய மத்திய குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் தலைவராக சின்னத்துரை வரதராஐன் அவர்களும், பொதுச் செயலாளராக செல்வராஐா கஜேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன் மத்தியகுழு உறுப்பினர்களது விபரங்களும் அறிவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அது உருவாக்கப்பட்ட நோக்கமாகிய தமிழ்த் தேசம் தனித்துவமான இறைமை கொண்டதேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற இலக்கு நோக்கி உறுதியுடன் செயல்ப்படும் எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டது.

அத்துடன் பின்வரும் விடயங்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஊடகவியலாளர் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் என்பனவற்றை அரசு உடன் நிறுத்த வேண்டும்.

தமிழ் மக்களது இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மக்கள் வாழ்விடங்களில் நிலைகொண்டுள்ள படையினர் அப்பகுதிகளில் இருந்து முழுமையாக வெளியேறி மக்களது இயல்பு வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி தமது சொந்த வீடுகளில் குடியமர உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்.

யாழ் குடாநாட்டில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குடும்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.

மக்களை மரணபயத்தில் வைத்திருப்பதற்காக குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இராணுவ சோதனைக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளையும், பொது மக்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் மறைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் அனைவரது பெயர் விபரங்களும் உடன் வெளியிடப்படல் வேண்டுமென்பதுடன் அவர்கள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும்.

ஆகிய விடங்கள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

மேலும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தாயாரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக செல்ல முற்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொலீசார் படுகொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பொலீசாரின் கொலை மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த மாணவர்கள் அதற்கெதிராக பல்கலைக்கழகத்தினுள் ஐனநாயக வழியில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களைப் பின்பற்றி பொது அமைப்புக்களும், மக்களும் இராணுவ அடக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கும் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கும், காணாமல் போனவர்களை மீட்டெடுப்பதற்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கும் ஐனநாயக வழியில் போராட முன்வர வேண்டுமெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவிலுள்ளோர் பற்றிய விபரம் வருமாறு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

23-02-2011
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 20-02-2010 அன்று உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த 20-02-2011 அன்று இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது.

மத்திய குழு உறுப்பினர்கள் விபரம்

தலைவர்: சின்னத்துரை வரதராஐன்(பிரபல பொருளியல் ஆசிரியர்)
பொதுச் செயலாளர்: செல்வராஐா கஜேந்திரன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

உபதலைவர்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
திருமதி.பத்மினி சிதம்பரநாதன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
இராஐகோன் ஹரிகரன்
ஆர்.இ.ஆனந்தராஐா

உதவிச் செயலாளர் சி.பார்த்தீபன்
நிர்வாகச் செயலாளர் இ.கிருபாகரன்
பிரசார செயலாளர் எஸ்.இளங்கோ
பொருளாளர் கந்தையா தங்கராஐா
உபபொருளாளர் சி.கிருஸ்ணகுமார்

செயற்குழு உறுப்பினர்கள்

கி.வினோஐினி
எஸ்.ரவீந்திரன்
க.கணபதிப்பிள்ளை
கு.தவக்குமார்
என்.காண்டீபன்

சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இளைஞர் விவகாரப் பொறுப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
மகளீர் விவகாரப் பொறுப்பாளர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன்

மத்திய குழு தெரிவைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான அரசியல் யாப்பு உருவாக்குவதற்காக, பொதுச் சபையானது அரசியல் நிர்ணய சபையாகச் செயற்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

செல்வராஐா கஜேந்திரன் சின்னத்துரை வரதராஐன்
பொதுச் செயலாளர் தலைவர்

யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி  Jaffna_tn_23211_1யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி  Jaffna_tn_23211_2யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி  Jaffna_tn_23211_5யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி  Jaffna_tn_23211_6யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி  Jaffna_tn_23211_7
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» முள்ளிவாய்க்காலின் பின்னரும் முடிவுக்கு வராத யுத்தம்
» தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்கள் முன்வைப்பு
» பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
» பிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum