அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திரை விமர்சனம்

Go down

திரை விமர்சனம்  Empty திரை விமர்சனம்

Post by thadcha Fri Feb 25, 2011 7:17 pm

நடுநிசி நாய்கள்

நகரத்தில் நடக்கும் பெண்களின் தொடர் கொலைகளைப் பற்றிய கதை.
கௌதம் மேனன் வித்தியாசமான படம் என்ற பெயரில் ஒரு கொடூரமான கொடுமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். என்ன ஆச்சு மனுஷனுக்கு? அவருக்கு என்ன! வித்தியாசம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனா பார்க்கிறது நாம்தான! படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும்! இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம். அதற்காக எதை வேண்டுமானாலும் சினிமாவா எடுக்கலாம்னா, என்ன நியாயம்?
அவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல! இந்தப் படத்தை பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்களோடு' ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.
சரி கதைக்கு வருவோம். எட்டு வயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் ஒரு சிறுவன். அதுவும் அவரது தந்தையால் உட்படுத்தப்படுகிறான். அதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு பக்கத்து வீட்டு ஆன்ட்டியின் ஆதரவும் அன்பும் கிடைக்கிறது. ஆன்ட்டியின் உதவியால் தன் தந்தையிடம் இருந்து மீண்டு வரும் சிறுவன் ஆன்ட்டியின் பராமரிப்பிலேயே வளர்கிறான். ஆனால் தந்தையிடம் இருந்து மீண்ட சிறுவன் தனது மனப்பிறழ்வில் இருந்து மீளவில்லை. அதனால் ஏற்படும் சம்பவம்களும் பாதிப்புகளுமே மீதிக்கதை.
பெற்ற தந்தை மற்றும் அவரது நண்பர்களின் குரூப் செக்ஸ் ஷோக்களால் மனதளவில் எட்டு வயதிலேயே கெட்டுப் போகும் ஹீரோ வீரா அதனால் அனாதையும் ஆகிறான். தன்னை எடுத்து வளர்க்கும் பக்கத்து வீட்டு பெண்மணியை பலாத்காரமும் செய்கிறான். அவனிடமிருந்து தப்பிப்பதற்காகவும், அந்த தவறான உறவில் இருந்து விடுபடுவதற்காகவும், அதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்த அம்மணி, தன் நீண்ட நாள் நண்பரை வீராவின் சாட்சி கையெழுத்துடன் (?) பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவிலேயே வளர்ப்பு தாயின் காதல் கணவரை தீர்த்துக் கட்டும் வீரா, அதனால் ஏற்படும் தீ விபத்தால் வளர்ப்பு தாய் கம் தான் தாலி கட்டாத தாரத்தையும் இழக்க வேண்டிய சூழல். வளர்ப்பு தாய் இறந்தாரா? இருந்தாரா? வீரா என்ன ஆனார்? எப்படி வாழ்ந்தார்? அவரால் எத்தனை பெண்கள் வீழ்ந்தனர்? என்பதுதான் படத்தின் திகிலும் பிகிலுமான மீதிக் கதை!
நாயகனாக சமர், வீரா என்ற கேரக்டர்களில் புதுமுகம் வீரா நடித்திருக்கிறார். அப்படியென்றால் டபுள் ஆக்ஷனா என்று கேட்காதீர்கள். ஸ்பிளிட் பர்சனாலிட்டி. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மல்டிபிள் பர்சனாலிட்டி. நல்ல நடிப்பு, பிரமாதமான நடிப்பு. ஆனால் எரிச்சலூட்டுகிறார். அவரது பாத்திர படைப்பு அப்படி. அதிலும் முதல் பாதியில் அடிக்கடி மீனாட்சி அம்மா, மீனாட்சி அம்மா என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றுகிறார்.

ஹீரோ வீராவின் பள்ளித் தோழியாக வந்து பள்ளி அறைத்தோழி ஆகாமலே தப்பிக்கும் சுகன்யாவாக வரும் சமீரா ரெட்டி, தன் காதலன் அர்ஜூனுடன் சேர்ந்து பண்ணும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமே நச். மற்றபடி ப்ச்! சமீராவின் காதலர் அர்ஜூனாக வரும் அஸ்வின், போலீஸ் ஏ.சி.பி. விஜய்யாக வரும் தேவா, 8 வயது சமராகவும், 13 வயது வீராவாகவும் வரும் மாஸ்டர் நடிகர்கள் என எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். வீராவின் சென்னை பங்களாவில் குறைக்கும் - கடிக்கும் டைசன் உள்ளிட்ட நாய்கள் கூட நடுநிசி நாய்கள் படத்தில் நன்றாகவே நடித்திருக்கின்றன.
நாயகன் நாயகியை தவிர்த்து பக்கத்து வீட்டு ஆன்ட்டியாக புதுமுக நடிகை ஸ்வப்னா. அவரை தேர்ந்தெடுத்ததில் கௌதமின் ரசனையை வியக்கிறேன். நல்ல அழகு, எனினும் அந்த அழகு சிதைக்கப்படுகிறது. அப்புறம், விஜய் என்னும் போலீஸ் அதிகாரியின் கேரக்டரில் புதுமுக நடிகர் தேவா. ஆரம்பத்தில் வரும் சில காட்சிகள் அவர் புத்திசாலி போலீஸ் என்று கூறுகிறது. ஆனால் இறுதிவரை அந்த புத்திசாலித்தனத்திற்கு வேலை கொடுக்கப்படவில்லை.
'ஈரம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தான் இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரெண்டும் த்ரில்லர் கதை என்பதாலோ என்னவோ அந்தப்படத்தின் பாதிப்பு ஆங்காங்கே ஒளிப்பதிவில் தெரிகின்றன. இந்த படத்திற்கு இரண்டு மணிநேரம் தேவையே இல்லை. ஒன்றரை மணிநேரத்திலேயே கதை சொல்லி முடித்திருக்கலாம்.
படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணிநேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர். கௌதம் மேனன் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் அதை இப்படித்தான் தவறான பாதையில் நிரூபிக்க வேண்டுமா...? இயக்குநர் தனது ரசனையையும், மூளை பலத்தையும் குப்பையில் கொண்டுபோய் கொட்டியிருக்கிறார். மாஸ், கிளாஸ் இரண்டையும் முயன்று இரண்டிலும் பரிதாபமாக தோற்றிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் பெரிய மைனஸ்- வக்கிரமான காட்சியமைப்புகள். இத்தனைக்கும் இன்னும் நிறைய வக்கிரங்களை இயக்குநர் கேமராவின் கோணத்தில் காட்டாமல் புரிய வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ரொம்ப மோசம். அதிலும் முதல்பாதியில் செக்ஸ், செக்ஸ், செக்ஸ். இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள் இப்படி எதுவுமே இல்லாதது புதிய முயற்சிதான் என்றாலும் ஒரு கமர்ஷியல் சினிமாவாக தோற்றுப்போகிறது.
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum