அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திரை விமர்சனம்

Go down

திரை விமர்சனம்  Empty திரை விமர்சனம்

Post by thadcha Fri Feb 25, 2011 7:19 pm

ஆடுபுலி

மூன்று தலைமுறைகளை கொண்ட குடும்பத்தின் ஹீரோவுக்கும், வில்லனுக்குமான ஆடுபுலியாட்டம் தான் கதை.
சி.எம். சீட்டுக்காக நாய் மாதிரி அலையும் ஒரு சந்தர்ப்பவாத, பச்சோந்தித்தனமான மனநிலை கொண்ட அரசியல்வாதி.... தான் படத்துக்கு வில்லன். அவரது பொண்ணைக் காதலிக்கும் ஹீரோ...எப்படி எதிர்ப்புகளை மீறி கைப்பிடிக்கிறார்ங்கறது தான் கதை.
ஜாலியான ஒரு கமர்ஷியல் படம் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் அதை சொல்ல விடாமல் தடுக்கிறது.
'ஈரம்', 'அய்யனார்', 'மிருகம்' போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட்டில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஆதிக்கு விஜய் மாதிரி ஆக்ஷன் கம் மசாலா ஹீரோ ஆகணும்னு ஆசை வந்துடுச்சு போல.. அறிமுக பாடல் காட்சிலயே விஜய் மாதிரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பயப்பட வைக்கிறார். ஹீரோயினுடன் காதல், வில்லனுடன் மோதல் என்ற ரெகுலர் மசாலா ஹீரோவின் வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ஹீரோயின் பூர்ணா.. ஜூனியர் அசின் முகச்சாயல்னு இவரை கோடம்பாக்கத்துல சொல்றாங்களாம். (அப்படின்னு பூர்ணாவே வதந்தியை கிளப்பறாரோ என்னவோ?) முகத்துல ஒரு ஃபிரஸ்னெஸ்ஸெ இல்லை. ஏதோ சம்பளம் வாங்குனமா? டைரக்டர் சொன்னபடி நடிச்சமா?ன்னு ரொம்ப சுமாரான நடிப்புத்தான்.
ஆதியின் அப்பாவி அப்பாவாக நடித்திருக்கும் பிரபுவின் கேரக்டருக்கு சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. இதுபோல யுவராணி, அனுபமா, கே.ஆர்.விஜயா, ரவிச்சந்திரன் போன்ற மற்ற கதாபாத்திரங்களும் மனதில் ஒட்டாமல் வந்துபோகின்றன. வாயை திறக்காமல் மனதுக்குள் பேசி, ரசிகர்களை வாய்விட்டு சிரிக்கவைத்திருக்கிறார் மயில்சாமி.
கட்டிப் பிடித்தால் ஒரு அர்த்தம். கையை குலுக்கினால் ஒரு அர்த்தம், என்று தர்ம அடி சாஸ்த்தாவாக விளங்குகிறார் மினிஸ்டர் சுரேஷ். கடைசிவரை சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் அவரது மேனரிசத்திற்கு தியேட்டரே தலை வணங்குகிறது. வெல்கம் வாத்யாரே...
சுரேஷின் கதாபாத்திரத்தின் மூலமும், அவர் செய்யும் வில்லத்தனத்தின் மூலமும் படத்திற்கு சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறார் இயக்குநர் விஜய்பிரகாஷ். அதே சமயத்தில் காதல் காட்சிகளில் எந்த புதுமையும் இன்றி ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் சுறுசுறுப்பு அடையும் படம், அவ்வப்போது தடுமாறி தகிடதத்தோம் போடுகிறது.
சுந்தர் சி.பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சொல்லும்படியாக இல்லை. படத்தின் தீம் மியூசிக் மட்டும் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
'உன்னை நினைக்கையிலே மனசுக்குள் மழைக்காலம்' என்ற பாடல் வரிகளை அழகாக எழுதிய கவிஞர் பாடலை படமாக்கிய விதத்தினை பார்த்திருந்தா பாட்டு எழுதுறதையே விட்டுடுவார்...அந்த அளவுக்கு சொதப்பியிருக்கிறார்கள்.
அதே போல் இடைவேளைக்குப்பிறகு வரும் மாமூல் ஃபேமிலி சாங்க்கில் அத்தனை பேரும் (கிட்டத்தட்ட 24 பேர்) கூலிங்க் கிளாஸ் அணிந்து வந்து பயமுறுத்துகிறார்கள். அந்த பாடல் காட்சியில் பழம்பெருமை மிக்க ரவிச்சந்திரன், கே.ஆர். விஜயா உட்பட அனைவருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்து அவர்களையும் படுத்தி, நம்மையும் படுத்தி எடுக்கிறார் இயக்குநர்.
ஆடுபுலி
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum