அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வடமாகாண ஆளுநரின் அடாவடி! ஆரியத் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை அகற்ற உத்தரவு

Go down

வடமாகாண ஆளுநரின் அடாவடி! ஆரியத் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை அகற்ற உத்தரவு  Empty வடமாகாண ஆளுநரின் அடாவடி! ஆரியத் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை அகற்ற உத்தரவு

Post by Admin Wed Mar 02, 2011 3:35 pm

யாழ். கொட்டடியில் உள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ஆரியத் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை அங்கிருந்து அகற்ற இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், தமிழ் மொழி பற்றாளர்கள் இந்த நடவடிக்கை குறித்து கொதித்துப் போய் உள்ளனர். இது ஒரு திட்டமிட்ட புறக்கணிப்புச் செயல் என்று அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் 15 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக கொட்டடியில் உள்ள பாரதி பாஷா வித்தியாசாலை கட்டடத்தில் இயங்கி வருகிறது. வடக்கு, கிழக்கு மாகாணச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய கட்டடம் 1999 ஆம் ஆண்டு சங்கத்துக்குச் சொந்தமாக கையளிக்கப்பட்டது. அன்றிலிருந்து சங்கம் இதனை தனது சொந்தக் கட்டடமாகவே பராமரித்து வருகிறது.

திடீரென அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் நேற்றுச் சங்கத்தினருக்கு அறிவித்துள்ளனர். மாகாண ஆளுநர் உத்தரவின் பேரில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கட்டடத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும் படி சங்கத்தின் செயலாளர் ம.கடம்பேஸ்வரனுக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

எமது சங்கத்தின் வளர்ச்சிக்காக நீண்ட காலம் பாடுபட்டவரும் தமிழ் வளர்த்த தமிழ் அறிஞமான அமரர் அளவெட்டிப் பண்டிதர் க. நாகலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தை பெரியளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகையில், நேற்று முற்பகல் 10 மணிக்கு சீருடையில் வந்த இராணுவத்தினர், நீங்கள் இனிமேல் இந்தக் கட்டடத்தில் இயங்க முடியாது என்று கூறியுள்ளதாக கடம்பேஸ்வரன் தெரிவித்தார்.

1921 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்.ஆரிய, திராவிட பாஷா விருத்திச் சங்கம் யாழ். மாவட்டத்தில் பல பண்டிதர்களை உருவாக்கி தமிழ்மொழியை வளர்த்துவருகின்ற பாரம் பரியமிக்கதொரு தழிழ் வளர்த்த சங்கம்.

யாழ். கொட்டடி மூடப்பட்டிருந்த பாரதி பாஷா வித்தியாசாலைக் கட்டடத்தை அந்தக் காலத்தில் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு வடக்கு, கிழக்கு மாகாணச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா சங்கச் செயற்பாடுகளுக்காக வழங்கியிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணச் செயலாளரின் பணிப்புரைக்கு அமையவும் சுற்றுநிபங்களுக்கு அமையவும் இந்தக் கட்டத்தை சொந்தமாக சங்கம் வைத்திருக்கமுடியும் என்று 1999 ஆம் ஆண்டு யாழ். வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த என்.தணிகாலசம்பிள்ளை எழுத்து மூலம் தங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் 1999.09.19 ஆம் திகதி முதல் இந்தக் கட்டடத்தில் பண்டிதர் பரீட்சைக்கான வகுப்புகள், மாணவர்களுக்கான தமிழ், ஆங்கில, சமஸ்கிருத வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

வடமாகாண ஆளுநரின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவத்தின் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார்.

நீண்டகாலமாக யாழ். மண்ணில் பல தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்கி அதன் ஊடாகத் தமிழ் மொழியை வளர்த்து வந்த ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தை அந்தக் கட்டடத்தில் வெளியேறுமாறு இராணுவத்தினர் அறிவித்துள்ளமை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விசனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வடமாகாண மக்கள் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணமாக யாழ் நூலகம்: கிழக்கு முதலமைச்சர்
» லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
» போராட்டக்காரர்களை பாதுகாக்க போர்ட் படையினருக்கு ஏமன் அதிபர் உத்தரவு
» மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum