அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து

Go down

அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து Empty அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து

Post by theepan Thu Mar 03, 2011 6:25 am

அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து Kevin_o_brien001உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 15 வது போட்டியாக இன்று பெங்களூருவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ஸ்ட்ராஸ், பீட்டர்சன் இருவரும் நல்ல துவக்கத்தைத் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்களைச் சேர்த்தது. ஸ்டராஸ் 34 ரன்களும் பீட்டர்சன் 59 ரன்களும் எடுத்தனர். ட்ராட் அதிரடியாக ஆடி 92 பந்துகளில் 92 ரன்களைச் சேர்த்தார்.
நடுவரிசையில் களம் இறங்கிய பெல் தன் பங்குக்கு 81 ரன்களை எடுத்தார். பின்னால் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.
328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கிய அயர்லாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் பந்திலேயே போர்டர் பீல்ட் ஆட்டம் இழக்க அந்த அணி தடுமாறியது. ஸ்டிர்லிங்க் மற்றும் ஜோய்ஸ் இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இருவரும் தலா 32 ரன்கள் எடுத்தனர். அடுத்து என் ஓ பிரையன் 29 ரன்கள் எடுத்தார். வில்ஸன் 3 ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி ஒரு கட்டத்தில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
போட்டி ஒரு வகையில் இங்கிலாந்து பக்கமே சென்று விட்ட நிலையில், நடுவரிசை ஆட்டக்காரராகக் களம் இறங்கிய கெவின் ஓ பிரைன் மற்றும் குசாக் இருவரும் இணைந்து ரன்ரேட்டை உயர்த்தினர். கெவின் ஓ பிரைன் அதிரடியில் அசத்தினார். பெங்களூரு ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைய வைத்தார்.
இந்த உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறந்த சிக்ஸர் அடித்து பட்டியலில் முதல் இடம் பிடித்தார். மேலும் 50 பந்துகளில் 100 ரன்கள் கடந்து, உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதம் கண்டவர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இவர் மொத்தம் 6 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறக் காரணமாக இருந்தார். குஸாக் 47 ரன்களும் மூனே 33 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் அந்த அணி ஐந்து பந்துகள் மீதம் இருக்கையில் 7 விக்கெட்கள் இழந்து வெற்றிக்குத் தேவையான 329 ரன்களை எளிதில் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
வெற்றி நாயகனாக ஜொலித்த கெவின் ஓ பிரைன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து Kevin_o_brien001
அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து John_mooney001
அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து Matt_prior001
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum