அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்

Go down

தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்  Empty தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்

Post by kaavalan Sat Mar 05, 2011 5:48 am

தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அழித்தவர்கள் காலப்போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையம் அழிப்பார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் உப தலைவர் எம்.எம் ரதன் ஆசிரியர் தெரிவித்தார்.

வவுனியா, பூந்தோட்டம் இந்துமயானத்தில் இடம் பெற்ற எரிவாயு உடல் தகனம் செய்யும் சாதனம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பூந்தோட்டம் இந்துமயான சங்க தலைவர் ஐ.திருவிளங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபையின் உப தலைவர் எம்.எம் ரதன் ஆசிரியர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடமாகாணத்திலேயே முதலாவது எரிவாயு உடல் தகனம் செய்யும் சாதனம் வவுனியாவில் நிறுவப்படுவது பெருமைக்குரிய விடயமாகும் வவுனியா நகரசபை மேற்கொண்டு வரும் பணிகளில் அதிசிறந்த பணி இதுவாகும்.

இன்று வடமாகாண மக்களுக்கும் வவுனியா வாழ் மக்களுக்கும் சிறந்த ஒரு நாளாகும். தென்னிலங்கையில் பல பிரதேசங்களிலும், கண்டியிலும், கிழக்கு மாகாணத்திலும் இறந்த பின் உடலை எரிப்பதற்கு எரிவாயு சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் வடமாகாணத்தில் எந்த மாவட்டத்திலும் இந்த சாதனம் கிடையாது. இது இன்றுதான் வவுனியாவில் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதியதோர் அத்தியாயத்தை ஏற்படுத்துகிறது.

ஒப்பந்தக்காரர்களின் கூற்றுப்படி மூன்று மாதத்தில் இவ்வேலையை முடித்து தருவதாக உறுதியளித்துள்ளார்கள். இதற்காக 4.2 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் வவுனியாவில் மலர்சாலை ஒன்றையும் விரைவில் அமைக்கவுள்ளோம். அதற்காக ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்படும்.

இறப்பிற்கு பின்னர் மனித வாழ்வு மதிக்கப்பட வேண்டும். ஆனால் எமது இனத்தை பொறுத்தவரையில் அது மிதிக்கப்படுகிறது.

இந்த மண்ணுக்காக போராடி விதைக்கப்பட்டவர்கள் உறங்கு துயிலுமில்லங்கள் இடிக்கப்பட்ட கொடூரமான நிகழ்வை நாம் கண்டோம். எமது மாவட்டத்தில் காணப்பட்ட ஈச்சங்குளம் துயிலுமில்லத்தில் எஞ்சியிருப்பது. மதில் ஒன்றின் சிறிய பகுதி மடடுமே.

எமது நினைவுச் சின்னங்கள் எல்லாவற்றையும் இல்லாமல் செய்தால் பத்து வருடங்களுக்கு பின்னர். எமக்கான எமது இனத்திற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை என்று கூற முற்படுவார்கள்.

நான் தற்பொழுது பேசிக்கொண்டிருப்பது ஒரு மயானம். அண்மையில் வல்வெட்டித்துறை மாயானத்தில் நடந்தது என்ன? பார்வதி அம்மாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் அவரது சாம்பலை அள்ளி வீசினார்கள். அவ்விடத்தில் நாய்களை சுட்டு போட்டார்கள்.பார்வதி அம்மா உங்களுக்கு செய்தது என்ன? ஆயுதம் ஏந்தி போராடினாரா? அல்லது சண்டைகளுக்கு சென்றாரா?

பல்வேறுபட்ட மதகோட்பாடுகளுக்கு அமைவாக வாழுகின்றவர்கள் செய்வது இதுவா? இதன் ஊடாக இன ஐக்கியம் வளருமா? இவ்வாறான சம்பவங்கள் ஒவ்வொரு தமிழர்களையும் ஆவேசப்படுத்தியுள்ளது. எமது ஜனநாயக போராட்டத்திற்கான உந்து சக்தியை அதிகரித்துள்ளது.

இந்த மயானத்தில் அமைக்கப்படும் எரிவாயுவில் உடல் தகனம் செய்யும் இந்த சாதனம் கூட காலபோக்கில் இனம்தெரியாதவர்கள் என்ற நாமத்துடன் சேதமாக்கப்படலாம்.

ஏனென்றால் இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட நகரசபையால் நிர்மாணிக்கப்படும். ஒரு சாதனம் ஆகும். ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நினைவு சின்னங்களை இல்லாமல் செய்தார்கள். காலப்போக்கில் தமிழ் தேசியத்திற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக செய்யப்படும் அபிவிருத்தி சார்ந்த நினைவுச் சின்னங்களை இல்லாமல் செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்
தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்  DSC_0444தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்  DSC_0454தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்  DSC_0467தமிழர்களின் நினைவுச் சின்னங்கள் அழித்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்களையும் அழிப்பார்கள் - எம்.எம்.ரதன்  DSC_0472
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
» அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து நாளை பறிபோகின்றது
» தமிழர்களின் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவில்லை
» தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும் – எஸ்.எம்.கிருஷ்ணா
» :love: பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு:love:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum