முப்பதுக்கு குறைஞ்சா நான் வரமாட்டேன்: சத்யராஜ்
Page 1 of 1

விஜய்யை ஏன் சிவாஜி கூட ஒப்பிடறீங்க. எம்ஜிஆர் என்பதும் மூன்றெழுத்துதான்.
அவர் கூட ஒப்பிடுங்களேன் என்று விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா பிரச்சினையில் ஆவேசப்பட்டிருந்தார் சத்யராஜ். விஜய்யை தூக்கி பேசணும் என்பதற்காக ஏன் சிவாஜியை குறைத்து பேசணும்? இனிமேல் சத்யராஜ் இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அகில சிவாஜி பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
விஜய்யை பெருமைப்படுத்துவதாக நினைத்து நடிகர் திலகம் சிவாஜியை அவமானப்படுத்துவதா என நடிகர் சத்யராஜுக்கு சிவாஜி பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும், கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்துகொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.
பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில்தான் தோல்வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. அப்படி அவர் அரசியலில் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கமாட்டார். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது-வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.
ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும். மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக்கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அந்த மேடையில் தான் பேசியதை மீண்டும் ஒருமுறை வீடியோவில் பார்த்தாராம் சத்யராஜ். அப்படி பேசியிருக்க வேண்டாமோ என்று அப்புறம்தான் யோசித்தாராம். அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சி பேசியதிலும் சின்ன அதிருப்தியாம் சத்யராஜுக்கு. இப்படத்தில் நடித்த சீமான், தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை வாங்கவில்லை என்று மேடையில் அவரை தூக்கி வைத்து கொண்டாடினார் எஸ்.ஏ.சி. அது அவரை பாராட்டுவதற்காக அல்ல. தன்னை சாடுவதற்காகதான் என்பதையும் பிறகுதான் புரிந்து கொண்டாராம் சத்யராஜ். ஏனென்றால், முதலில் ஐந்து லட்சம் சம்பளத்திற்குதான் இவரை நடிக்க அழைத்தாராம் எஸ்.ஏ.சி. முப்பதுக்கு குறைஞ்சா நான் வரமாட்டேன் என்று இவர் கண்டிப்பு காட்டினாராம். கடைசியில் கறாராக இருந்து முப்பதை வாங்கிக் கொண்டுதான் மேக்கப்பே போட்டாராம் அவர்.

Similar topics
» நான் உன்னை பிரிகையில் மழை
» நான் செய்த தவறு : வருத்தப்பட்ட விஜய்!
» துடுப்பாட்ட செய்தி தொலைக்காட்சியை நான் உடைக்கவில்லை: பாண்டிங்
» நான் அரச ஊழியர் மட்டுமே. என்னால் அரசியல் பேச முடியாது! - பிரித்தானிய தூதுக் குழுவிடம் யாழ்.அரச அதிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum