அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சல்மான் திருமணத்தைப் பார்க்க ஆவல்: அமீர்

Go down

சல்மான் திருமணத்தைப் பார்க்க ஆவல்: அமீர்  Empty சல்மான் திருமணத்தைப் பார்க்க ஆவல்: அமீர்

Post by Admin Thu Mar 17, 2011 2:18 pm

தனது நண்பரும், பிரபல பாலிவுட் நடிகருமான சல்மான்கானின் திருமணத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக சூப்பர் ஸ்டார் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
அமீர்கான் தனது 46வது பிறந்தநாளை பாலி ஹில்ஸ் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தனது நண்பரான சல்மான்கான் குறித்து உணர்ச்சிகரமாக பேசினார் அமீர்.

சல்மான்கானின் கல்யாணத்தைக் காண ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். அமீர் கூறுகையில், நான் சல்மானின் திருமணத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல அனைவரும் அவரது திருமணத்திற்காக காத்திருக்கின்றனர். அவர் திருமணம் செய்துகொள்ளும் நாள் எங்களுக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் நாள் ஆகும்.

நான் எப்போதும் சல்மானிடம் திருமணப் பேச்சு எடுத்தாலும் உடனே சிரிப்பார் அவ்வளவு தான். அழகான பெண்கள் அவரை எப்பொழுதும் சுற்றி வருகின்றனர்.

அதனால் அவருக்கு நிறைய சாய்ஸ் உள்ளது என்றார். கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த 'அந்தாஸ் அப்னா அப்னா' என்ற காமெடிப் படத்தில் அமீரும், சல்மானும் ஒன்றாக நடித்திருந்தனர்.

மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கவும் ஆவலாக உள்ளனர். அண்மைக் காலமாக இரண்டு கான்களும் நண்பர்களாகிவிட்டனர். சல்மான் 'பீப்ளி லைவைப்' பாராட்ட, அமீர் 'தபாங்' படத்தை புகழ என்று ஒரே புகழ்ச்சி மழையாக இருக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum