அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Go down

ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு Empty ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Post by devid Thu Dec 09, 2010 9:49 pm

ஐடிபிஐ வங்கியில் எக்சிக்யூட்டிவ் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுவோர் முதலில் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு செயல்பாடு மதிப்பிடப்பட்டு பணி நீட்டிப்பு வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு முடிவில் தேர்வு மூலமாக அவர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்.


மொத்த பணியிடங்கள்: 700 (பொது:332, எஸ்சி:105, எஸ்டி 53, ஓபிசி:189)


கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி (எஸ்சி, எஸ்டிகளுக்கு 50%)


வயது: 25-க்குள். எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.75. கட்டணத்தை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் அதற்கான சலானில் 15.12.2010-க்குள் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com அல்லது www.idbibank.com ஆகிய இணையதளங்கள் மூலம் 15.12.2010 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய இடத்தில் புகைப்படத்தை ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு எடுத்து வர வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு www.idbi.com அல்லது www.idbibank.com ஆகிய இணையதளங்களை பார்க்கவும்
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum