மீண்டும் புலிக்கதை பேசுவது ஏன்? இலங்கை வரலாற்றுடன் ஒட்டிக்கொண்ட இனம் தெரியாதோர் கலாச்சாரம்
Page 1 of 1
மீண்டும் புலிக்கதை பேசுவது ஏன்? இலங்கை வரலாற்றுடன் ஒட்டிக்கொண்ட இனம் தெரியாதோர் கலாச்சாரம்
கடந்த இரு வாரங்களில் பத்திரிகைகளில் வந்த இரு செய்திகள் சற்றுச் சிந்திக்க வைத்தன. பின்நோக்கியதே வரலாறு. அதனால் அந்த வரலாறும் அது தந்த படிப்பினைகளும் மீண்டும் மீண்டும் இலங்கை வரலாற்றில் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான இரு சம்பவங்களுடன் தொடர்புபட்டதே அந்தச் செய்திகள்.
முதலாவது பிரதமர் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் புலிகள் மீண்டும் உயிர்ப்புப் பெறுகின்றனர். தமிழ் நாட்டில் இடிக்கி என்ற இடத்தில் புலிகள் பயிற்சி பெறுகின்ற மூன்று முகாம்கள் உள்ளன. இந்த முகாமில் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உதவியாளர் பயிற்சி அளித்து வருகின்றார் என்று குறிப்பிட்டார்.
இது நாடாளுமன்ற அவையில் மாத்திரமல்ல வெளியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்திய தரப்பில் தொடராக பிரதமரின் கூற்றுக்கு மறுப்புகள் வெளிவந்தது மாத்திரமல்ல புது டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை வெளிநாட்டமைச்சுக்கு அழைத்து ஆட்சேபனை தெரி வித்ததுடன் தமிழகத்தில் அவ்வாறான பயிற்சி முகாம்கள் இல்லை என்றும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மறுப்புகளுடன் பிரதமர் ஊடகங்களின் செய்தியை ஆதாரமாக வைத்தே தான் மேற்படி உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியதாகத் தெரிவித்த அவர் பின்னர் அச்செய்திகள் தவறானவை என்பதை அறிந்து கொண்டதாக பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தியாவில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்கள் ஏதும் இல்லை என்று இந்திய அரசாங்கம் மறுத்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதும் விமர்சனங்களை அள்ளி வீசுவதும் பிறகு வருத்தம் தெரிவிப்பதும் சகஜமான விடயம். இலங்கை அரசியலில் இதனை நாம் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
ஆனால் நடைபெற்ற விடயங்கள் எவ்வளவு பாரதூரமானவை என்பதையோ அந்த பாரதூரமான விடயங்கள் மேலோட்டமாக கூறப்படும் சாக்குப் போக்குகளினால் சாந்தமாகி விடுமா? என்பது பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் தமிழ்மொழி மறைக்கப்பட்டது. அனைத்தும் சிங்களத்திலேயே நடைபெற்றன. இதுபற்றி அப்பொழுது தமிழ் அரசியல்வாதி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கிடைத்த பதில் "சாரி' மறந்துவிட்டோம் என்பதாகும்.
ஆனால் இன்றும் இலங்கை அரசியலில் தமிழ் மறக்கப்பட்டே வருகின்றது. அண்மையில் அரங்கேறிய தமிழில் தேசிய கீதம் பாடுவதை சர்ச்சையாக்கியவரை, இந்த விடயத்தைப் பார்க்கலாம். எனவே இலங்கை அரசியலுக்கு இதெல்லாம் ஒரு பழக்கதோஷம்.
முள்ளிவாய்க்கால் போருடன் புலிகளை துவம்சம் செய்துவிட்டதாக பிரகடனப்படுத்தியதற்குப் பின்னர் அரசாங்கம் புலிக்கதை பேசுவது ஏன்? என்று தெரியவில்லை!
இந்த விவகாரத்தை தொடக்கி வைத்த பெருமை இந்திய நாளிதழான "இந்து' வுக்கே உரியது. புலி முகாம்கள் தொடர்பான செய்தியை பிரசுரித்து பிரதமர் உரையாற்ற உதவியதோ என்று கூட தமிழ் மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் மறுப்புடன் பிரதமரின் தவறான செய்தி என நற்சான்றிதழுடன் "இந்து' நாளிதழ் இன்னொரு கதையை அவிழ்த்து விட்டுள்ளது. கேரள கரையோர பாதுகாப்பை தற்போது பலப்படுத்தியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுவதற்குப் பிறகும், புலிகள் பற்றி கவலைப்படும் அரசாங்கம் தமிழர் விவகார தீர்வுக்காக அதிகாரப் பகிர்வு யோசனைகளை முன்வைப்பது பற்றியோ அதனை நடைமுறைப் படுத்துவது பற்றியோ கவலை கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அரசாங்கம் இன்னுமொரு புலிகள் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டாலே போதுமானது.
தமிழர் விவகாரத்தில் தான் அரசாங்கம் இத்தகைய கொள் கையை கடைப்பிடிக்கிறது என்றால் வெளிநாட்டுக் கொள்கையிலுமா? இந்த நிலை என்று கேட்கத் தோன்றுகிறது.
அடுத்த செய்தி சிறிதரன் எம்.பி. பற்றியது. அண்மையில் அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் வைத்து தாக்கப்பட்டு உயிர் தப்பி வந்துள்ளார். இவர்களைத் தாக்கிய "இனந் தெரியாத துப்பாக்கி' நபர்கள் யார்? என்று இதுவரை தெரியவில்லை.
சுதந்திரத்திற்குப் பின் குறிப்பாக இலங்கை வரலாற்றுடன் ஒட்டிக் கொண்ட கலாசாரமாக இந்த "இனந் தெரியாதோர் கலாசாரம்' இருக்கின்றது.
சிறிதரன் போன்ற அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, பலர் இனந்தெரியாத நபர்களின் குறியாக மாறியுள்ளனர்.
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என ஒரு நீண்ட பட்டியலே இனந்தெரியாத நபர்களால் வரையப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். சிலர் உயிர் தப்பியும் உள்ளனர்.
ஆனால் "இனந்தெரியாத நபர்கள் யார்' என்பது தான் இன்னும் தெரியவில்லை.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» இந்தியா மீண்டும் மீண்டும் அணு சக்தி ஒப்பந்தங்கள் போடுவது பற்றி உங்களின் பார்வை என்ன ?
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum