அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராமஜெயம் கொலையில் அடுத்தடுத்து திகில் திருப்பங்கள்.

Go down

ராமஜெயம் கொலையில் அடுத்தடுத்து திகில் திருப்பங்கள். Empty ராமஜெயம் கொலையில் அடுத்தடுத்து திகில் திருப்பங்கள்.

Post by Admin Fri Apr 06, 2012 2:59 pm

ராமஜெயம் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் பிடிபட்டுள்ளனர். திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் தனிப்படையினரின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. விசாரணைக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என போலீசார் எதிர்பார்த்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.
தற்போது இக்கொலையில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.

கொலை நடந்த அன்று ராமஜெயம் கடத்தப்பட்ட பின்னர் கொலையாளிகள் காலை 8.30 மணியில் இருந்து 8.45 மணி வரை ராமஜெயம் வீடு, கேர் கல்லூரி மற்றும் அவரது குடும்ப நண்பர்கள் ஆகியோருக்கு ராமஜெயத்தின் செல்போனில் இருந்து பேசி முன்னாள் அமைச்சர் நேருவின் செல்போன் நம்பரை கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் அந்த சமயங்களில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் இருந்ததாக செல்போன் டவர் மூலம் தெரியவந்தது. இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கொலையாளிகளில் ஒருவன் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து 1 ரூபாய் காயின் போனில் இருந்து திருநெல்வேலிக்கு பேசியுள்ளான். சுமார் 20 நிமிடம் கடைக்காரரிடம் இருந்து ஒவ்வொரு 1 ரூபாய் காயினாக வாங்கி 20 ரூபாய்க்கு பேசி இருக்கிறான்.

இந்த தகவல் தற்போது தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பெட்டிக்கடையில் இருந்து திருநெல்வேலிக்கு பேசிய நம்பரை பெற்ற தனிப்படை போலீசார் அதற்கு டயல்செய்து பார்த்த போது அது சுவிட்ச் ஆப் ஆகியிருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தனிப்படை போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலியில் முகாமிட்டுள்ள 3 தனிப்படை போலீசார் சிம்கார்டு வாங்கப்பட்ட விலாசம் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் சென்னையில் பிடிபட்டுள்ளனர்.

ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. திமுகவினர் தந்த துப்பு: அம்மாமண்டபம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 20 நிமிடம் கொலையாளிகள் 1 ரூபாய் காயினில் பேசிய தகவல் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் சிலருக்கு தான் முதலில் கிடைத்துள்ளது. பின்னர் அந்த தகவல்களை உறுதி செய்த பின், நேரு தரப்பில் இருந்தே அந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமஜெயம் கடத்தப்பட்ட இடம் எது என்பதில் தொடர்ந்து குழப்பம் இருந்து வந்த நிலையில் அந்த இடம் சாஸ்திரி ரோட்டில் கோட்டை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியபகுதி தான் என்பதனை தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் கீழே கிடந்த ராமஜெயம் பாக்கெட்டில் இருந்த சில விஐபிகளின் விசிட்டிங் கார்டு மற்றும் ஒரு ரயில்வே டிக்கெட் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ராமஜெயம் கொலையில் அடுத்தடுத்து திகில் திருப்பங்கள். Ramajeyam


ராமஜெயம் கொலையில் அடுத்தடுத்து திகில் திருப்பங்கள். Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum