அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். ஊடகவியலாளர்களை உளவுபார்க்கும் பணியில் தயா மாஸ்டர் குழுவினர்

Go down

யாழ். ஊடகவியலாளர்களை உளவுபார்க்கும் பணியில் தயா மாஸ்டர் குழுவினர் Empty யாழ். ஊடகவியலாளர்களை உளவுபார்க்கும் பணியில் தயா மாஸ்டர் குழுவினர்

Post by priyanka Sun Dec 19, 2010 2:21 am

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளில் உள்ள இணையத்தளத்திற்கு பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களை பற்றிய விபரங்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியப்படுத்தும் வேலையில் இரண்டு ஊடகவியலாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.
கடந்த காலங்களிலும் சரி தற்போதும் யாழ்ப்பாணத்திலும் அதற்கு வெளியேயும் சரி நடந்து கொண்டிருக்கின்ற அநீதிகளை இந்த ஊடகவியலாளர்களே புடம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஊடகவியலாளர்களை வேட்டை நாய்களைப் போல் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது சில கையேந்திகளைக் கொண்டு இந்த ஊடகவியலாளர்களை அடையாளம் காண்பதற்கு இராணுவத்தினர் முனைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

கொழும்பில் இருந்து வந்த ஈ.பி,டி.பி ஆதரவுள்ள றுசாங்கன் என்பவரும், துரோகத்தனத்திற்குப் பெயர் போன தயா மாஸ்ரரும்தான் இந்த கையேந்திகள்.

இவர்கள் சில அரச அதிகாரிகளுக் கூடாக இந்த ஊடக வியலாளர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வருகின்றனர். இவர்கள் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னரும் இணையத்தளங்கள் பற்றி கூறியிருக்கின்றனர்.

இதனோடு குடாநாட்டில் உள்ள பத்திரிகைகளிற்கு சிறப்புச் செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களும் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களாம்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum