அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தில்

Go down

ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தில் Empty ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தில்

Post by devid Wed Dec 29, 2010 10:44 am

2010 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச உதைபந்தாட்ட அணிகளுக்கான தரப்படுத்தலில் உலகக் கிண்ண சாம்பியனான ஸ்பெயின் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனம் வெளியிட்டுள்ள இத்தரப்படுத்தல் பட்டியலில் கடந்த 18 மாதங்களில் ஐரோப்பிய அணிகள் முதல் மூன்று இடங்களையும் பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

இதேவேளை கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் மோதி 2 ஆம் இடத்தை பெற்ற நெதர்லாந்து அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதனால் ஜேர்மனி மூன்றாம் இடத்தையே பெற்றது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆர்ஜன்ரீனாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிறேசில் 4 ஆம் இடத்தையும் ஆஜென்ரீனா இங்கிலாந்து அணிகள் முறையே 5 ஆம் ஆறாம் இடங்களையும் பெற்றுள்ளன.

ஆபிரிக்க நாட்டு அணிகளில் முன்னணி வகிக்கும் எகிப்து 9 ஆம் இடத்தைப் பெற்றுள்ள அதேவேளை அமெரிக்கா 6 இடங்கள் முன்னேறி 18 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியா 6 இடங்கள் பின்தள்ளப்பட்டு 26 ஆவது இடத்திற்கு சென்றுள்ள போதும் ஆசியப் பிராந்திய அணிகளில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

தரப்படுத்தலில் மிகப்பெரிய முன்னேற்றமாக கடந்த வருடம் 75 ஆவது இடத்தைப்பெற்ற மொன்ரீ நீக்ரோ அணி 49 இடங்கள் முன்னேறி 25 ஆவது இடத்தைப்பெற்றுள்ளது. கடந்த மாதம் 13 ஆவது இடத்தைப் பெற்ற ரஷ்ய அணி இந்த இறுதித் தரப்படுத்தல் பட்டியலில் 101 இடங்கள் பின்தள்ளப்பட்டு 114 ஆவது இடத்தை அடைந்துள்ளது.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum