அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மேஷம் 01-01-2011 TO 31-12-2011

Go down

மேஷம் 01-01-2011 TO 31-12-2011  Empty மேஷம் 01-01-2011 TO 31-12-2011

Post by Admin Sat Jan 01, 2011 9:05 am

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடந்தேறும் .இதுவரை நடக்காமல் காலம் தாழ்த்தி வந்த நல்ல காரியங்கள் நடந்தேற வாய்ப்பு ஏற்படும் . அதிக உழைப்பு அதற்கேற்ற நல்ல வருமானமும் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் .

பேச்சில் எப்பொழுதும் கவனம் தேவை .எடுத்த காரியங்களில் வெற்றி கிட்ட கடுமையான உழைக்க வேண்டி வரும் .புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .உடன் பிறப்புகளால் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும் .உறவினர்களை விட்டு பிரிய நேரிடும் அல்லது நெருங்கிய உறவினர்களால் இழப்பு ஏற்படும் .

இடம் , மனை , விடு , விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் . தாயாரால் ஒரு சிலருக்கு நன்மை ஏற்படும் . கல்வியால் எதிர்பார்த்த நற்பலன் ஏற்படும்.

இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இவ்வாண்டு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் .காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் . கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் .சமுக சேவைகள் செய்ய பிரியம் ஏற்படும் . அதனால் பெயர் புகழ் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிட்டுவது கடினம் ஆகும்.

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் .ஒரு சிலருக்கு வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் .ஒரு சிலருக்கு அடிக்கடி கம்பெனி மாறி கொண்டே இருப்பார்கள் .அதே சமயம் பார்க்கும் வேலையில் முயற்சி இல்லாமல் ஒரு சிலர் வேலையை இழக்கவும் சந்தர்ப்பம் அமையும் . எனவே பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை .மேலும் உடல் ஆரோக்யத்தில் மிக கவனம் தேவை .உடலில் அடிவயிறு ,கை ,முதுகு போன்ற பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு நரம்புதளர்ச்சியும் ,ரத்த கொதிப்பு போன்ற நோய்களும் வர வாய்ப்பு இருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .அதிக அளவு வருமானமும் வருமானத்திற்கு மேல் அதிக அளவு கடனும் ஒரு சிலர் வாங்குவார்கள் .ஒரு சிலர் புதுக்கடனை வாங்கி பழைய கடனை அடைப்பர்.

புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் .நல்ல கணவன் ,மனைவி அமைய வாய்ப்பு அமையும் .திருமணம் ஆன உடனே ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .வழக்குகள் இழுத்தடித்து கொண்டே போகும் .ஒரு சிலர் தோல்வியை சந்திக்க நேரிடும் .ஒரு சிலர்க்கு உயர் கல்வியில் தடை ஏற்பட்டு பின் கல்வி தொடர வாய்ப்பு அமையும்.

போக்குவரத்து வண்டி வாகனக்களில் மிக அதிக கவனம் தேவை .நாள்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும் .அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையும் .ஒரு சிலர்க்கு கணவன் ,மனைவி அல்லது முன்னோர்களின் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு கிட்டும்.

முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்க சிலர்க்கு வாய்ப்பு அமையும் .ஒரு சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிட்டும். ஒரு சிலர்க்கு வெளிநாட்டில் வேலை மற்றும் அங்கேயே படிப்பு தொடரும் .ஆன்மிக பயணம் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .நீண்ட தூரம் ஸ்தல யாத்திரை செல்ல சந்தர்ப்பம் கிட்டும் .அடிக்கடி ஆலய தரிசனம் அமையும் .மகான்களின் தரிசனம் கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .

அரசு மற்றும் தனியார் துறைகளில் நல்ல வேலையில் அமைய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .இதுவரை நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும் .வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிட்டும்.

விவசாயத்தை பொறுத்தவரை ஓரளவு சுமாரான லாபம் தான் கிட்டும் .ஆரம்பத்தில் சிறிதளவு நஷ்டம் ஏற்பட்டாலும் பின் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிட்டும் .மருத்துவம் ,பொறியியல் ,ஆசிரியர்கள் நிதித்துறையில் இருப்பவர்கள் சமயம் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் ,மதகுருக்கள் ,ஜோதிடர்கள் ,வங்கியில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர். தகவல்த்துறை,போக்குவரத்து ,விமானத்துறை ,கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் புகழ் பெறுவர் .

ஓட்டல் ,அச்சு தொழில் ,ரியல் ஸ்டேட் துறை சுமாராகத்தான் இருக்கும். பெரிய அளவில் முதலிடு செய்வதில் கவனம் தேவை .மேலும் எலெக்ட்ரிக்கல் ,எலெக்ட்ரானிக்ஸ் ,இன்ஜினியரிங் தொழில் சிறப்படையும் . தோல் ,ரசாயனம் ,ஜவுளி ,ஏற்றுமதி ,இறக்குமதி சுமாராக இருக்கும்.ஆடை,ஆபரண தொழில் ,பிளாஷ்டிக் பொருள் உற்பத்தி செய்வோர் மற்றும் நடை பாதை வியாபாரம் செய்வோர் பெரிய அளவில் முதலிடு செய்தல் கூடாது .பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும்.

எம் பெருமான் முருகப் பெருமாளையும் ஸ்ரீ மஹா லஷ்மியையும் வணங்கி வர நற்பலன்கள் கூடும் . எண்ணிய எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் .
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum