தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
Page 1 of 1

சிறீலங்கா படைகளாலும், அதனது துணைப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது அதிகரித்த அளவில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பிற வடிவங்களிலான மனித உரிமை மீறல்களை தமிழர் நடுவம்- பிரான்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பான கவனம் கோரும் அறிக்கையானது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் உப அமைப்புக்கள், பிரான்சின் வெளிவிவகார அமைச்சு உட்பட சகல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்களுக்கும் தமிழர் நடுவத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் அண்மைக்காலங்களாக யாழ் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் நிகழ்த்தப்படும் அதிகரித்த அளவிலான கொலை மற்றும் காணமல் போதல் சம்பவங்களை தமிழர் நடுவம் பட்டியலிட்டுள்ளது.
சங்கானை ஆலயக் குருக்கள் நித்தியானந்த சர்மா படுகொலை,
வன்னியிலிருந்து யாழ்.குடாநாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த மகேந்திரன் திருச்செல்வம் காணமல் போன சில நாட்களில் தலை துண்டாடப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு,
வலிகாமம் பிரதேச பிரதி கல்வி பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் படுகொலை,
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் தொண்டர் கேதீஸ்வரன் படுகொலை,
உரும்பிராய் ஆசிரியர் விக்கினேஸ்வரன் படுகொலை
என்பனவற்றினை பட்டியலிட்டுள்ள தமிழர் நடுவம் இப்படுகொலைகள் சிங்கள அரசுவின் திட்டமிடப்பட நடவடிக்கைகள் என குற்றம்சாட்டியுள்ளது.
தமிழர் தாயகப்பகுதியில் இடம்பெறும் சிங்களமயப்படுத்தல் நடவடிக்கைகளிற்கு எதிராக தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு எழுவதை தடுக்கும் நோக்கில் இந்த திட்டமிடப்பட்ட வன்முறைகள் மற்றும் பிற வழி மனித உரிமை மீறல்களைப் சிங்களப்படைகள் புரிகின்றது.
அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக சிங்களப்படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பான விவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுவதை அச்சுறுத்தல் மூலம் தடுத்து நிறுத்த சிறீலங்கா அரசு இத்தகைய வன்முறைகள் மூலம் முயல்கின்றது.
சர்வதேச தமிழ்ச் சமூகம் இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச நடவடிக்கைகள் தேவை எனக் கருதுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய தமிழர் நடுவம், சர்வதேச நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில் இது மற்றுமொரு இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு வழிசமைப்பதுடன் இலங்கைத்தீவில் உறுதியற்ற சூழலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
இதனால் பிரான்சு அரசும், ஐரோப்பிய சமூக நாடுகளும் இந்த அதிகரித்த அளவிலான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த முயலவேண்டும் எனக் கோரியுள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» தமிழக மீனவர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
» பள்ளேகலவில் நாமலுக்கு எதிராக கோசம்
» பயங்கரவாதக் குற்றச்செயல்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள்: ஆசிய மனிதவுரிமைக் கவுன்சில்
» இலங்கையில் தொடரும் “இந்திய புராணமும்” பாதிக்கப்படும் அப்பாவி மக்களும்
» சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப

Permissions in this forum:
You cannot reply to topics in this forum