அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எந்த அணியையும் எளிதில் வெல்வோம்

Go down

எந்த அணியையும் எளிதில் வெல்வோம் Empty எந்த அணியையும் எளிதில் வெல்வோம்

Post by theepan Thu Feb 17, 2011 6:19 am

நியூசிலாந்து அணியை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும், எந்த அணியையும் எளிதில் வீழ்த்துவோம் என்றும் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியுள்ளார்.
இவர் மேலும் கூறியதாவது: வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து தோல்வியை சந்தித்தது. அதற்காக அணியை குறைவாக மதிப்பிட வேண்டாம். திறமை வாய்ந்த பலர் அணியில் உள்ளனர்.

எந்த ஒரு அணியையும் வெல்லும் திறமை எங்களிடம் உள்ளது. உலக கோப்பையை இந்த முறை நியூசிலாந்து அணி வெல்ல வாய்ப்பு இல்லை என கூறுகின்றனர். இதை நான் ஏற்கமாட்டேன்.

இந்திய அணி வலிமையாக இருந்தாலும், சொந்த மண்ணில் விளையாடுவதால் அதுவே அணிக்கு பலவீனம் தான் என்று நினைக்கின்றேன். இந்திய அணியை பெரிதும் விமர்சிக்கின்றனர். இது போன்ற விமர்சனங்கள் அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிராங்க்ளின், சவுத்தீ, டெய்லர் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இவ்வாறு ஜான் ரைட் கூறினார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum