பயங்கரவாதக் குற்றச்செயல்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள்: ஆசிய மனிதவுரிமைக் கவுன்சில்
Page 1 of 1

பயங்கரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பலானவர்கள் அப்பாவிகள் என்பதாக ஆசிய மனித உரிமைக் கவுன்சில் வலியுறுத்துகின்றது.
அதற்கு எடுத்துக்காட்டாக மாத்தளைப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞர் ஒருவர் கடந்த முப்பது மாதங்களாக அநியாயமாக விளக்கமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவத்தை ஆசிய மனித உரிமைக் கவுன்சில் சுட்டிக் காட்டுகின்றது.
சுரன்ஜித் கிரிசாந்த பொ்ணான்டோ எனும் பெயருடைய பிரஸ்தாப வாலிபன் கண்டி குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிசாரால் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆயினும் அவர் மீதான குற்றப் பத்திரிகை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அதன் காரணமாக அவருக்கும் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.
பயங்கரவாதக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனைய இளைஞர்களின் நிலையும் அதுதான் என்று குறிப்பிட்டுள்ள மனித உரிமைக் கவுன்சிலானது, இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் சட்டத்துறை மீதான நம்பகத்தன்மையைக் குலைத்து விடுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிற்கும் முறைப்பாடுகளை ஆசிய மனித உரிமைக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது

MayA- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum