அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கச்சதீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஆபத்து!

Go down

கச்சதீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஆபத்து! Empty கச்சதீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஆபத்து!

Post by theepan Sat Feb 26, 2011 10:48 pm

கச்சதீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஆபத்து! Katchatheevu_map
கச்சதீவுக் கடல் அருகே பிரிட்டன் நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மீனவ அமைப்பினர் மற்றும் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளை குடாவை ஒட்டிய கச்சதீவுப் பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சதீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008 இல் அனுமதி அளித்தது.
இதற்காக அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது எனவும், இப்பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராஜன் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு:
கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிற்றெட் என்ற அந்த பிரிட்டன் நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.
கச்சதீவுப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூடச் செல்ல முடியாது.
புயல், காற்று நேரத்தில் கூட அப்பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும். மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டி விட்டு பன்நாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரைவார்க்கும் முயற்சிதான் இது.
மன்னார் வளைகுடாப் பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்தான் கச்சதீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயற்படுகிறது. அதனை இந்திய அரச நடவடிக்கை பார்க்கிறது என்றார் அவர்.
இதேவேளை, இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர் மன்னன் கூறியுள்ளார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum