அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ

Go down

குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ Empty குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ

Post by prasath Tue Mar 01, 2011 12:48 am

குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ Thejan_002ஒரு படம் வெளியாகி வெள்ளி விழா கண்ட பிறகும் அதில் நடித்த ஹீரோவை சில ஆண்டுகள் கழித்து தேட வேண்டியது இருக்கும்.
ஆனால் புதுமுகம் தேஜின் நிலையோ அப்படியே உல்டாவாக இருக்கிறது இவர் நடித்திருக்கும் முதல் இரண்டு படங்கள் இன்னும் வெளியாகமலே இவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருக்கிறது.

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'காதலுக்கு மரணமில்லை' படம்தான் தேஜின் அறிமுகம். அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமானார்.

படத்தை விரைவாக முடித்து விட்டு ரீலிஸிற்காக படக்குழுவினர் காத்திருக்க, தேஜிக்கு புதுப்பட வாய்ப்புகள் ஏராளமாக வருகிறதாம்.ஏகாதசி இயக்கியிருக்கும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த எதிர்பார்ப்பு அலை அப்படியே ஹீரோ தேஜின் மீதும் ஏற்பட்டதால், நீயூ மூன் ஸ்டுடியோ சார்பில் சஞ்சய் கணேஷ் தயாரிக்கும் 'காந்தம்'. ஜோசப் என்பவர் தயாரிக்கும் 'காதல் பயணம்' ஆகிய இரண்டு படங்களின் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

முதல் படமே வெளியவரவில்லை அதற்குள் எப்படி இந்த வாய்ப்புகள் என்று தேஜிடம் கேட்டால், இதற்கு காரணம் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படம்தான். அதில் எனக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்ததால் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினேன்.

அதற்கு கிடைத்த பலன் தான் இந்த வாய்ப்புகள். அதிலும் இயக்குநர் ஏகாதசி, தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் இருவரும் என்னை சுதந்திரமாக செயல்பட வைத்து, என்னை ஊக்கப்படுத்தி நன்றாக நடிக்க வைத்தார்கள்.

இந்த வாய்ப்புகளுக்கு நன்றி என்று சொன்னால் அந்த இருவர்களுக்கும்தான் சொல்வேன். 'கொஞ்சம் மழை கொஞ்சம் வெயில்' படத்தில் எனது நடிப்பை பற்றி கேள்விப்பட்டே இப்படி வாய்ப்புகள் வருகிறது என்றால், படம் வெளியாகி அதை பார்த்தபிறகு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum