அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வான் படை தளபதி ரொஷான் குணதிலக்க பழிவாங்கப்பட்டுள்ளார்

Go down

வான் படை தளபதி ரொஷான் குணதிலக்க பழிவாங்கப்பட்டுள்ளார்  Empty வான் படை தளபதி ரொஷான் குணதிலக்க பழிவாங்கப்பட்டுள்ளார்

Post by Admin Tue Mar 01, 2011 2:18 am

வான்படைக்கு 60 வருடம் நிறைவடைந்தமையை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்விற்கு 3 தினங்கள் இருக்கும் நிலையில் வான்படைத் தளபதியாக இருந்த எயார் சீப் மாஷல் ரொஷான் குணதிலக்க இன்று ஓய்வுபெற்றுச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பழிவாங்கலின் ஒரு அங்கம் என வான்படை உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் நான்காவது ஈழயுத்தத்தின் போது வான்படைத் தளபதியாகச் செயற்பட்டு வந்தார்.

இவ்வாறான பழிவாங்கல் முன்னர் சரத் பொன்கேசாவுக்கும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் இராணுவத்தின் 60 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவிருந்த சந்தர்ப்பம் பறிக்கப்பட்டு சரத் பொன்சேகா கூட்டுப்படை தளபதியாக்கப்பட்டார்.

இராணுவத்தின் 60 ஆம் ஆண்டு நிகழ்வு நடைபெறும் வரைக்கும் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக நீடிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. எனினும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அதற்கு இணக்கம் தெரிவிக்காமலேயே அவரை பதவி மாற்றம் செய்தார்.

இவ்வாறான ஒரு நிலையே வான்படைத் தளபதிக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரொஷான் குணதிலக்க கூட்டுப்படை தளபதியாக்கப்பட்டுள்ளார். இந்த பதவி எவ்வித அதிகாரமும் அற்ற பதவியாகும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதியாக செயற்படுமாறு ரொஷான் குணதிலக்கவை, கோத்தபாய ராஜபக்ச கேட்டுக்கொண்ட போதும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனையடுத்து கோத்தபாயவுக்கும் ரொஷான் குணதிலக்கவுக்கும் இடையில் முறுகல் உருவானது. இந்தநிலையில் புதிய வான்படைத் தளபதியான ஹர்சா அபேவிக்கிரம இன்று பொறுப்பேற்றுள்ளார்.


வான் படை தளபதி ரொஷான் குணதிலக்க பழிவாங்கப்பட்டுள்ளார்  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum