அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைத்துப்பாக்கியால் வன அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்

Go down

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைத்துப்பாக்கியால் வன அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்  Empty விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைத்துப்பாக்கியால் வன அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்

Post by Admin Tue Mar 01, 2011 5:45 pm

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரொருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி பொத்துவில் வனஅதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளதாக பொத்துவில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பொத்துவில் காட்டில் சட்டவிரோதமாக விறகு வெட்டச்சென்றிருந்த சிலரை வன அதிகாரிகள் கைது செய்து பொலிசுக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அதன் போது திடீரென ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி வன அதிகாரிகளை அச்சுறுத்தி கைது செய்யப்பட்டவர்களை மீட்டுக் கொண்டு போயுள்ளார். அதன் பின் பொலிசில் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பிரதேசமெங்கும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், சந்தேக நபர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின் நேற்று முன்தினம் அவ்வாறு தப்பிச் சென்றவர்கள் சட்டத்தரணியொருவர் ஊடாக பொலிசில் சரணடைந்திருந்தனர். நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

ஆயினும் வன அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. சரணடைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் சந்தேக நபர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயலாற்றியவர் என்பது தெரிய வந்திருப்பதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைத்துப்பாக்கியால் வன அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum