அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசாங்கத்துக்கெதிராக திரும்புவாரா முன்னாள் விமானப்படைத்தளபதி?

Go down

அரசாங்கத்துக்கெதிராக திரும்புவாரா முன்னாள் விமானப்படைத்தளபதி? Empty அரசாங்கத்துக்கெதிராக திரும்புவாரா முன்னாள் விமானப்படைத்தளபதி?

Post by theepan Thu Mar 03, 2011 6:09 am

அரசாங்கத்துக்கெதிராக திரும்புவாரா முன்னாள் விமானப்படைத்தளபதி? Roshan_gunathilak
இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக்க மிக விரைவில் தன் பதவியிலிருந்து விலகி அரசாங்கத்துக்கெதிரான போக்கை வெளிப்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக மிகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது கடற்படை மற்றும் விமானப் படைகளே முக்கிய பங்கு வகித்திருந்தன. புலிகளின் ஆயுத விநியோகத்தைத் தடுப்பதில் விமானப்படை மற்றும் கடற்படை கூட்டிணைந்த செயற்பாடுகளே பெருவெற்றியாக அமைந்திருந்தன.
ஆயினும் போரின் வெற்றிக்கு ஒட்டுமொத்த உரிமையையும் தனதாக்கிக் கொள்ளும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்டு வருவதன் காரணமாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாரிய பங்களித்த படைத்தளபதிகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
முதலாவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓரங்கட்டப்பட்டவுடன் அவர் அரசாங்கத்துக்கெதிராக தோ்தலிலும் களம் இறங்கி தற்போது கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக முன்னாள் படைத்தளபதிகளாக்கப்பட்டுள்ள வசந்த கரண்ணாகொட, தயா சந்தகிரி மற்றும் வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி ஆகியோர் அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமை காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அதிலும் வசந்த கரண்ணாகொட ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் தூரத்து உறவினர் என்பதால் அவருக்கு அரசாங்கத்துக்கெதிராக திரும்பும் மனோநிலையை ஏற்படுத்திக் கொள்வது கடினமான விடயமாகவே உள்ளது.
அவ்வாறான நிலையிலேயே தற்போது விமானப்படைத் தளபதியாக இருந்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாரிய பங்களிப்பை வழங்கிய ரொஷான் குணதிலக்க ஓரங்கட்டப்பட்டுள்ளார். விமானப்படையின் வைரவிழாவுக்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் அந்தப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவர் முப்படைகளின் பிரதம அதிகாரி பதவிக்கு மாற்றப்பட்டது அவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான பனிப்போரின் உச்சகட்டம் என்பதாக கருதப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி இன்று நடைபெற்ற விமானப்படையின் வைரவிழா நிகழ்வுகளில் அவர் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.
அவ்வாறான நிலையில் அவர் மிக விரைவில் தற்போதைய பதவியான முப்படைகளின் பிரதம அதிகாரி என்ற பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டு சரத் பொன்சேகாவைப் போன்று அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அவர் திரும்பும் பட்சத்தில் விமானப்படை வீரர்கள் மாத்திமன்றி கடற்படை மற்றும் இராணுவ வீரர்களும் அவருக்கு ஆதரவாக அணிதிரள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. அந்தளவுக்கு அவர் ஏனைய படைப்பிரிவு வீரர்கள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
யுத்தத்தின் போது காயமுற்ற படைவீரர்களை உடனடியாக ஏற்றியிறக்கவும், அவர்களுக்குத் தேவையான வழங்கல் மற்றும் குண்டுவீச்சு ஒத்துழைப்பை தாமதமின்றி மேற்கொள்ளவும் அவர் நடவடிக்கை எடுத்த காரணத்தாலேயே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மனோதிடத்துடன் போரிடக் கூடிய ஆற்றல் கிடைத்தது. அதன் காரணமாக முப்படை வீரர்கள் மத்தியிலும் அவருக்குத் தனி மரியாதையும், அளவற்ற அபிமானமும் உள்ளது.
அதுமாத்திரமன்றி அவர் சரத் பொன்சேகாவைப் போல திடுதிப்பென்று அரசியலுக்குள் அறிமுகமாகக் கூடிய நிலையிலும் இல்லை. அவரது தகப்பனார் ஹரி குணதிலக்கவும் முன்னாள் விமானப்படைத் தளபதி என்பது மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராகவும் செயற்பட்டவர். அதன் காரணமாக ரொஷான் குணதிலக்கவுக்கு இயல்பாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளம் இருக்கின்றது.
அது மாத்திரமன்றி இலங்கையின் வரலாற்றில் தகப்பனும், தனயனும் படைத்தளபதிகளாக பணியாற்றிய குடும்பம் என்ற கௌரவமும் பொதுமக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
அவ்வாறான நிலையில் ரொஷான் குணதிலக்க அரசாங்கத்துக்கெதிராக திரும்பும் பட்சத்தில் அது அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக அமைந்து விடும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum