அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள்

Go down

கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Empty கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள்

Post by theepan Thu Mar 03, 2011 6:11 am

இலங்கை விமானப்படையின் அறுபதாம் ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்ட வைரவிழாக் கொண்டாட்டங்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமான போதிலும் கிபிர் விமானங்கள் அதில் பங்கேற்கவில்லை.
கொழும்பு இரத்மலானை விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவருடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், முக்கிய அமைச்சர்கள் பலரும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதிக்காக ஆயிரத்து ஐநூறு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடாத்தப்பட்டது. விமானப்படையின் புதிய தளபதி சகிதம் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
இலங்கை விமானப்படை வரலாற்றில் பாரிய இழப்பை ஏற்படுத்திய நேற்றைய விமான விபத்தின் பின்னரும் விமானப்படையின் அறுபதாம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஏலவே திட்டமிட்டது போன்று இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கிபிர் விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை அவற்றைத் தரையிலேயே நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இன்றைய கொண்டாட்டங்களில் கிபீர் விமானங்கள் பங்கேற்கவில்லை. விமான சாகசங்களுக்கும் ஏனைய விமானங்களே பயன்படுத்தப்பட்டன.
அத்துடன் நேற்றைய விமான விபத்தில் காயமடைந்த விமானி வஜிர ஜயகொடி இன்றைய கொண்டாட்டங்களை முன்னிட்டு சிகிச்சைகளை இடைநிறுத்தி தேசிய மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
நான்கு சாதாரண விமானங்களுடன் ஆரம்பமான இலங்கை விமானப்படை இன்று ஆளில்லா உளவு விமானங்களைத் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கின்றமை குறித்து ஜனாதிபதி தனதுரையில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அத்துடன் விமானப்படையின் வைரவிழாக் கொண்டாட்டங்களை நினைவு கூரும் வகையில் விசேட ஞாபகார்த்த நாணயமொன்றும், முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af001
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af002
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af004
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af003
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af005
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af006
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af007
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af008
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af009
கிபிர் விமானங்கள் பங்கேற்காத விமானப்படையின் வைரவிழா கொண்டாட்டங்கள் Af010
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum