அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல்

Go down

யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல் Empty யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல்

Post by theepan Fri Mar 04, 2011 6:19 am

யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல் Douglas_02
யாழ். வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் தமிழீழ அன்னை பார்வதியம்மாள் மறைவின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள விடாது பய அச்சுறுத்தல்கள் விசாரணைகள் யாவும் இராணுவ, ஒட்டுக்குழுக்களின் (ஈபிடிபி) அதிகார முடுக்கல்களின் வெளிப்பாடே என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பார்வதியம்மாளின் அஸ்தியில் நாயை போட்டு கேவலப்படுத்தியமை.
இராணுவத்தின் அபிவிருத்தி கூட்டம் பருத்தித்துறையில் இடம் பெற்றமை.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற வாழ் மக்களை இராணுவத்தினர் மனித உரிமை மீறலுக்குட்படுத்தி பதிவு செய்யப்பட்டமை.
நாளை மறுதினம் வல்வைச் சந்தியில் பஸ் தரிப்பு நிலைய திறப்பு விழா.
ஏற்கனவே திறக்கப்பட்ட மீன்சந்தை திறப்பு விழா மீண்டம் நாளை மறுதினம் திறப்பு.
இவைகள் யாவும் அதிகாரப் பிரிவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகின்றன.
ஏனெனில் கல்வெட்டில் வல்வை சன சமுக நிலையத்திற்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட காணி. மற்றும் 10.03.2011. வரும் தினங்களில் தனது 60வது வயதடையும் வல்வை சனசழூக நிலையத்தின் பெயர், முன்னாள் நகர பிதாவான அடிக்கல் நாட்டி முழுமையாக உழைத்து உருப்பெற வைத்த சிவாஜிலிங்கம் அவர்களின் பெயர் எவையும் இடம்பெறவில்லை.
யாழ். மாவட்ட இராணுவ தளபதியும், சிறுகைத்தொழில் அமைச்சரும் பிரதம விருந்தினராக அழைக்கப்படுவதும்! திணிக்கப்படுவதும்! இவற்றையிட்டு மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்
இவைகளை பார்க்குமிடத்து ஒட்டுமொத்தத்தில் வடக்கில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றமையை உறுதிசெய்கின்றன.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். மாநகர சபையின் கோடிக்கணக்கான பணம் தனியாருக்கு தாரை வார்ப்பு! அதிகார துஷ்பிரயோகம்
» யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
» யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum