அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பொலன்னறுவையில் வாக்குச் சாவடிக்குக் குண்டுத் தாக்குதல்

Go down

பொலன்னறுவையில் வாக்குச் சாவடிக்குக் குண்டுத் தாக்குதல்  Empty பொலன்னறுவையில் வாக்குச் சாவடிக்குக் குண்டுத் தாக்குதல்

Post by Admin Thu Mar 17, 2011 2:12 pm

பொலன்னறுவையில் வாக்குச் சாவடியொன்றுக்கு இன்று காலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பொலன்னறுவையின் அரலகங்வில பிரதேசத்தில் அமைந்துள்ள மகுல்தமண வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மீதே இன்று அதிகாலை மூன்று மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், தற்போது அவர் மருத்துவசிகிச்சைகளுக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் குண்டுத் தாக்குதல் காரணமாக வாக்களிப்பு நிலையத்தின் பணிகளில் தடங்கல் ஏற்படவில்லை என்றும் வழமை போன்று காலை ஏழுமணி தொடக்கம் வாக்களிப்பு ஆரம்பமானதாகவும் பொலன்னறுவை மாவட்ட தோ்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அறிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வாக்களிப்பு நிலையத்திற்கு இராணுவத்தினரின் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பொலன்னறுவையில் வாக்குச் சாவடிக்குக் குண்டுத் தாக்குதல்
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum