அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகக்கிண்ண போட்டியில் இந்தியா வெற்றி! பட்டாசு கொளுத்திய தமிழர்கள் தாக்கப்பட்டனர் - சிவாஜிலிங்கம்

Go down

உலகக்கிண்ண போட்டியில் இந்தியா வெற்றி! பட்டாசு கொளுத்திய தமிழர்கள் தாக்கப்பட்டனர் - சிவாஜிலிங்கம்  Empty உலகக்கிண்ண போட்டியில் இந்தியா வெற்றி! பட்டாசு கொளுத்திய தமிழர்கள் தாக்கப்பட்டனர் - சிவாஜிலிங்கம்

Post by MayA Tue Apr 05, 2011 12:56 pm

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வெற்றி கொண்டதையடுத்து யாழ்குடாநாட்டில் பட்டாசு வெடிகொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.
யாழ்குடாநாட்டில் பல இடங்களில் இவ்வாறான தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வெடிகொளுத்திய பலர் வீதிகளில் குப்பைகளை ஏற்படுத்தியதாக படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் மட்டும் சுமார் 20 பேர்மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

வெள்ளை வhன்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்த ஆயுததாரிகளே பரவலாக இவ்வாறான தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

கிரிக்கெட் போட்டியை உறவினர் வீடுகளில் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து யுத்த வெற்றியுடன் ஒப்பிட்டு இராணுவத்தைச் சார்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் சித்தரித்ததன் விளைவுதான் இதுவெனவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத்திருத்தாயின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் - எம்.கே.சிவாஜிலிங்கம்
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸாருக்கு பழுதடைந்த உணவு
» இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு
» இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி
» உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பாடலை பாடியவர் மன்னிப்பு கோரினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum