அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*அதிரடி ஆக்ஷனில் பின்னி எடுத்த நமிதா*~*

Go down

*~*அதிரடி ஆக்ஷனில் பின்னி எடுத்த நமிதா*~* Empty *~*அதிரடி ஆக்ஷனில் பின்னி எடுத்த நமிதா*~*

Post by Tamilkings Tue May 03, 2011 4:36 pm

அதிரடி ஆக்ஷனில் பின்னி எடுத்த நமிதா


*~*அதிரடி ஆக்ஷனில் பின்னி எடுத்த நமிதா*~* Namitha-reel02

அதீத கவர்ச்சிப் பாவையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நமிதாவை வித்தியாசமான கோணத்திலும், வித்தியாசமான கேரக்டரிலும் ரசிகர்கள் காணும் நாள் நெருங்கி விட்டது. தெலுங்கில் நமிதா நடித்து வரும் படம் 'லவ் காலேஜ்'. இப்படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார் நமிதா. கவர்ச்சிகரமான பாத்திரத்தில் மட்டுமல்லாமல், அதிரடி ஆக்ஷனிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் நமிதா. இதற்காக மெனக்கெட்டு தனது உடல் பொலிவையும் கூட்டி, தேவையற்ற கொழுப்பைக் கைவிட்டு டிரிம்மாகி அசத்தலாக காணப்படுகிறார். இதுவரை தனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளாராம் நமிதா. இது கன்னடத்தில் வெளியான நமிதா 'ஐ லவ் யூ' படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம். விரைவில் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மச்சான்ஸ்ங்களுக்கு செம ட்ரீட்தான்!

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum