அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ.நா.வின் நிபுணர் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Go down

ஐ.நா.வின் நிபுணர் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது Empty ஐ.நா.வின் நிபுணர் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Post by Admin Wed Dec 22, 2010 4:24 am

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை இம்மாதம் இறுதிவரை
நீடிக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னர் சிற்றி பிரஸின் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் துணை பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் சில இதுவரையில் முறையாக கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது அவை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது, பர்ஹான் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த மாதத்தின் இறுதி வரையில் நிபுணர்கள் குழுவுக்கு சாட்சியங்களை அனுப்பி வைக்க முடியும் என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த மாதம் 15ம் திகதியுடன் முறைப்பாடுகளுக்கான கால அவகாசம் நிறைவடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

காலம் முடிவடிந்தமை காரணமாக நிபுணர்கள் குழுவினால் அதிக அளவான கடிதங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நிராகரிக்கப்பட்ட பல குற்றச்சாட்டு பொதிகள், மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் எனவும் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

இலங்கையில் நடந்த கடைசிக்கட்டப் போரின்போது பெருமளவில் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நடந்தேறின. பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாக கொன்றழிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வுக்குப் புகார்கள் குவிந்தன.

இதுகுறித்து ஆரம்பத்தில் பான் கீ மூன் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடூரமுகம் குறித்த ஒரு வீடியோ காட்சி வெளியானதைத் தொடர்ந்து ஐ.நா.வுக்கு நெருக்குதல் அதிகரித்தது. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை பான் கீ மூன் அறிவித்தார்.

இந்தக் குழு டிசம்பர் 15ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பிக்க முதலில் கால அவகாசம் தரப்பட்டிருந்தது. இருப்பினும் விசாரணை முடிவடையாத நிலையில் தற்போது கால அவகாசம் டிசம்பர் மாதக் கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழு உறுப்பினர்கள் இதுவரை இலங்கைக்குப் போகவே முடியவில்லை. காரணம், இலங்கை அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் இலங்கைக்கு அவர்கள் வரலாம் என கொழும்பு சம்மதம் தெரிவித்தது.

இந்த நிலையில்தான் தற்போது குழுவின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பான் கீ மூனின் துணை செய்தித் தொடர்பாளரான பர்ஹான் ஹக் கூறுகையில், குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்களது திட்டப்படி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். எப்போது அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை என்றார் ஹக்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. வின் நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் விமல் வீரவன்ச
» மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்
» நான் அரச ஊழியர் மட்டுமே. என்னால் அரசியல் பேச முடியாது! - பிரித்தானிய தூதுக் குழுவிடம் யாழ்.அரச அதிபர்
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum