அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து நாளை பறிபோகின்றது

Go down

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து நாளை பறிபோகின்றது Empty அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து நாளை பறிபோகின்றது

Post by Admin Mon Oct 25, 2010 6:23 am

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்களின் 150 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நாளையுடன் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு பல்வேறு தேவைகளையும் நெருக்கடி மிக்க காலங்களில் தீர்த்துவந்த இந்த வைத்தியசாலை கல்முனைக்குடியில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை திறக்கப்பட்ட பின்னர் பலத்த சரிவைக்கண்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் குறித்த வைத்தியசாலையினை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க பலத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அது தமிழ் அரசியல் தலைமைகளினால் ஓரளவு தடுக்கப்பட்டுவந்து.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையினை முற்றாக முஸ்லிம் மையப்படுத்த தீவிரவாத முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடும் பிரயத்தனங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டுவந்தனர்.

இதற்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளை முஸ்லிம்களாகவே குறித்த அரசியல்வாதிகளினால் நியமித்துவந்தனர்.

இந்த நிலையில் அதனை பொறுப்பேற்ற டாக்டர் இராஜேந்திரன் வைத்தியசாலையை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கையின் ஆணிவேரை கண்டறிந்து அவற்றினை களையும் கடந்தகால நடவடிக்கைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தார்.

எனினும் அப்பகுதியில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கடும் மந்த கதியில் இருந்ததன் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட பெருமளவான வைத்திய சாதனங்கள் அஸ்ரப் வைத்தியசாலைக்கே சென்றடைந்தன.

அம்பாறை மாவட்டத்துக்கென வரும் அனைத்து வசதிகளும் அஸ்ரப் வைத்தியசாலைக்கே கொண்டுசெல்லப்பட்டமையினால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை வீழ்ச்சியடைய செய்ய தீவிர முயற்சிகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையை பொறுப்பேற்ற டாக்டர் இராஜேந்திரன் தமது வைத்திசாலையை ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளினால் மட்டுமே காப்பாற்றமுடியும் என்ற நோக்கோடு அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு கடந்தகாலங்களில் பல்வேறு நடவடிக்கையையும் மேற்கொண்டுவந்தார்.

இந்த நிலையில் கடந்த காலத்தில் இவரை இடமாற்றி தமது இனத்தவரை நியமிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் மீள்குடியேற்ற அமைச்சராகவுள்ள கருணா அவர்கள் அதனை பல தடவைகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வைத்தியர் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக முஸ்லிம் வைத்திய அதிகாரி ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளதுடன், வியாழக்கிழமைக்கு அடுத்துவரும் தினங்கள் விடுமுறை என்பனதால் ஏதும் செய்யமுடியாத வகையில் இந்த இடமாற்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான பைசல் காசிம், அதாவுல்லா, தயாரட்ன ஆகியோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் காரணமாக எதிர்வரும் ஆறு மாத காலங்களில் இந்த வைத்தியசாலை அஸ்ரப் வைத்தியசாலையுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று இரகசியமான முறையில் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கென தனித்துவமாக சேவைசெய்து வந்த ஒரேயோரு சொத்தான ஆதார வைத்தியசாலையாக இருந்த இந்த வைத்தியசாலை பறிபோவது குறித்த இப்பகுதி தமிழ் மக்கள் பலத்த அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த நியமனத்தை நிறுத்த உடனடி நடவடிக்கையெடுப்பதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் தான் சுகாதார அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் நாளை சிறந்த முடிவு எட்டப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்
» அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நாளை
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
» அம்பாறை மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாம் மூடப்பட்டுள்ளது
» தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum