அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு

Go down

முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு Empty முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு

Post by Admin Fri Dec 31, 2010 3:54 am

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னாள் போராளிகள் மீது பழிசுமத்துவதை விடுத்து உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிப்பதே மேலானது அதனைச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்புத் தரப்பையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
பலத்த பாதுகாப்பில் சூழப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறான தொடர் அச்சம் நிலவுகின்றமையானது மக்களைப் பதற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இதனை அரசாங்கம் மேலும் அனுமதிக்குமானால் சர்வதேச ரீதியில் அவப்பெயர் மாத்திரமே எஞ்சியிருக்கும் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யாழ்.நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:

யாழ்ப்பாணம் சங்கானையில் குருக்கள் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட இராணுவத்தளபதி அவரை கைதுசெய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதன் பிரகாரம் நோக்குவோமானால் அதற்குப் பின்னரான படுகொலை கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் அதற்கு முன்னரான கொலைகள் மற்றும் கொள்ளைகளுடன் இராணுவத்திற்கு தொடர்பிருக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. நிலைமை இப்படியிருக்கையில் மேலெழுந்தவாரியாக கருத்துக்களை வெளியிட்டு ஒரு தரப்பின் மீது அதாவது முன்னாள் போராளிகள் மீது குற்றம் சுமத்தும் அவர்கள் மீது பழிகளைப் போடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று.

யாழ்ப்பாணத்தின் தெருவெங்கிலும் சந்திகளிலும் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதற்கு மத்தியில் அச்சுறுத்தல்களும் இடம்பெறுவது கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது.

யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய சூழலில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். குடும்பங்களாக வாழ்கின்றவர்களுக்கே இந்த நிலை என்றால் தனித்து வாழ்கின்றவர்களின் நிலைமை அதிலும் மோசமானது.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது பாதுகாப்புத் தரப்பினரின் கடமையாகும். அதனை விடுத்து குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது. யாழ்ப்பாணத்தில் தங்க நகைகளை, காப்புகளை அல்லது மாலைகளை அணிந்து கொண்டு மக்களை சுதந்திரமாக நடமாடமுடியாத சூழலொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை அரசாங்கம் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இதுவரையில் யாழ் சம்பவங்கள் தொடர்பில் அரச தரப்பிலிருந்தோ அல்லது பொலிஸ்மா அதிபரிடமிருந்தோ எந்தவொரு கருத்தும் வெளிப்படுத்தப்படவில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் முன்னாள் போராளிகளானாலும் சரி இராணுவமாக இருந்தாலும் சரி அல்லது வேறு தரப்பினராக இருந்தாலும் சரி சட்டம் சரியாக செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அங்கு சிவில் நிர்வாகம் சட்டம் ஒழுங்கு என்ற எதுவும் நிலையற்றதாகவே காணப்படுகின்றது. இதனால் தான் அங்கு பகற் கொள்ளைகள் இரவுக் கொள்ளைகள், இரவில் வீடு புகுந்து சுட்டுப்படுகொலை செய்வது மற்றும் பட்டப்பகலில் இடம்பெறுகின்ற ஆட்கொலைகள் அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

எனவே குற்றவாளியைக் கண்டுபிடிக்காது ஊகத்தின்பேரில் ஒரு சாரார் மீது பழியைப்போடுவது தீர்வாக அமையாது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதியளிக்குமேயானால் அது சர்வதேசத்தின் மத்தியில் அபகீர்த்தியையே உண்டு பண்ணும்.

எனவே, அரசாங்கம் இதில் உடனடியாகத் தலையீடு செய்து யாழ்ப்பாணத்தின் அச்சத்தையும் பதற்றத்தையும் தணிக்குமாறு அரசாங்கத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வினயமாக கேட்டுக்கொள்கின்றது என்றார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி
» மனித உரிமையாளர்கள் மீது திட்டமிட்ட பிரச்சாரம்! உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum