அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு

Go down

அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு  Empty அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:20 am

தமிழ் மக்களின் நீடித்த துன்பங்களுக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முன்முயற்சியாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை முக்கியமான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போது, குறைந்தது இருவாரங்களுக்காவது இரு தரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளனார்.

நேற்றைய சந்திப்புக் குறித்து யாழ்.மாவட்டத் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது:

இச் சந்திப்பை "பேச்சுவார்த்தையின் தொடக்கப்புள்ளி' என்று குறிப்பிட்ட அவர், சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாகவும் முதலாவது கூட்டமாகையால் அடுத்தடுத்த சந்திப்புகளைக் கட்டமைப்பு ரீதியாக எவ்வாறு முன்னெடுப்பதென ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

இதேவேளை சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு குறித்துத் தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரசியல் இணக்கப்பாடு மற்றும் அவசர மனிதாபிமான மீள்கட்டுமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் ஊடாக நல்லிணக்கத்தை நோக்கி முன்னகர்வதற்காகக் கூட்டமைப்பான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் சந்திப்பை மேற்கொண்டனர்.

இச் சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, நிமால் சிறிபாலடி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்குழுக்களுக்கு செயலாளராக ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன பங்குபற்றினார்.

விடயங்களை அடையாளம் கண்டு ஒழுங்கமைப்பு ரீதியாகத் தீர்வுகளை எட்டுவதற்கான பணியை அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சந்திப்பில் பங்கேற்றோர் இணங்கியுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை எட்டுவதற்கான பணிகளை ஆராயும் எதிர்கால பேச்சுவார்த்தைகளை வலுவான தளத்தை ஏற்படுத்தவும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்’ என்று இந்தச் சந்திப்பிற்கு முன்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

ஜனாதிபதிக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையில் இரு தடவைகள் தனித்தனியே பேச்சுகள் இடம்பெற்றிருந்ததாகவும் அரசுக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த வருடம் சில சந்திப்புகள் இடம்பெற்றன என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பலாலியும் காங்கேசன்துறையும் இந்தியாவுக்கு: இலங்கை அரசாங்கம் இணக்கம்
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு
» அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum