அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மன்னாரில் அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்திய மக்கள்

Go down

மன்னாரில் அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்திய மக்கள்  Empty மன்னாரில் அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்திய மக்கள்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:23 am

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அச்சக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் இடம்பெறவிருந்த மாற்றுக்குடியேற்றம் அந்தப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.
2004ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேச செயலாளரினால் 500 காணித்துண்டுகள் தமிழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்டன. காணிக்கச்சேரி நடத்தப்பட்டு உரியவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இருந்தும் யுத்தம் காரணமாக இந்ததிட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இந்தக்காணிகளில் இருந்து இடம்பெயர்ந்திருந்த 30 குடும்பங்களைக் குடியேற்றும் முகமாக ஒரு நிகழ்வும் நேற்று நடைபெறவிருந்தது.

இந்தநிகழ்வில் கலந்துகொள்வதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மற்றும் அதிகாரிகளும் நானாட்டான் மகாவித்தியாலயத்துக்கு வருகை தந்தனர்.

இதன் போது குறித்த நடவடிக்கைகக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் அமைச்சரின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டனர்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்களின் மத்தியில் இன முறுகல்களை ஏற்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் இந்தக்காணிகள் ஒதுக்கப்பட்டது.

தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்து மீள்குடியேற்றத்தை இடைநிறுத்தியுள்ளார். இந்தநிலையில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி மாற்றுக் காணிகளைப் பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம்
» ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்
» மக்கள் பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் இருக்கவேண்டிய கட்டாயமில்லை - மனோ கணேசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum