அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

Go down

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.  Empty கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

Post by kaavalan Fri Feb 18, 2011 4:01 am

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் குடாநாட்டு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குடாநாட்டில் இழுவைப்படகு மூலமான தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மாவட்டத்தின் சகல பிரதேச மீனவர்களும் ஒப்புதலளித்தனர்.

இதற்கிடையில் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என இந்திய மீனவர்களின் கைது சம்பவத்தை வைத்து அரசியல் நடத்தவும் சிலர் முயல்கின்றனர். இன்றய கூட்டமும் அவ்வாறானதொரு தொனியிலேயே கூட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் குடாநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்டபோதும். இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்ற விடயம் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டது.

எனினும் குடாநாட்டில் ஆழ்கடல் மீன்பிடித்துறை முகங்கள் இல்லை இருப்பவையும் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் கிடக்கிறது. இதற்கு மேல் மாவட்டத்தில் மீளவும் பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்து இதற்கு மேல் பெருமளவு கடலுணவு உற்பத்தியை தரக்கூடிய கடற்பிரதேசங்கள் தொடர்ந்து பாதுகாப்பு வலயங்களாக உள்ளன.

இவைபற்றியெல்லாம் பேசத்தெரியாதவர்கள் இந்திய மீனவர்கள் பற்றி மட்டும் கரித்துக் கொட்டியது தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மட்டும்தான் என கூட்டத்தில் கலந்து கொண்ட சில அதிகாரிகள் தமக்கு நெருக்கமானவர்களிடம் முனுமுனுத்துள்ளனர்.

இதில் உள்ள இன்னொரு வினோதம் என்னவென்றால் யாழ்.மாநகர சபைத்தேர்தலையொட்டி தங்களுடைய சுயலாபத்திற்காக யாழ்.குருநகர் கடலில் இழுவைப் படகு மூலமான மீன்பிடிக்கு நீண்ட காலத்தின் பின்னர் தான்தோன்றித்தனமாக அனுமதியளித்தனர்.

இன்று அவர்களே சுற்றுச் சூழல்பாதிப்பும் பாதுகாப்பும் பற்றிபேசியுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.  17211meeti_1கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.  17211meeti_2
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் நடந்து கொண்டவிதம் முறையற்றதெனக் குறிப்பிட்டுள்ள பருத்துறை நீதிபதி
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புகைப்படங்கள் சில….
» சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது
» சமஷ்டி தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum