அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் லண்டனை தளமாகக்கொண்ட அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் அகிலன் தையல் பயிற்சி நிலையம்

Go down

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் லண்டனை தளமாகக்கொண்ட அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் அகிலன் தையல் பயிற்சி நிலையம் Empty கிளிநொச்சி இராமநாதபுரத்தில் லண்டனை தளமாகக்கொண்ட அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் அகிலன் தையல் பயிற்சி நிலையம்

Post by theepan Sun Feb 20, 2011 6:33 am

தாயகத்தில் தமிழர் பூமியில் கடந்தகாலத்தில் நடாத்தப்பட்ட கொடிய போரினால் பெரும் உயிரழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் மக்கள் சந்தித்ததுடன் தமது வாழ்வாதாரமாக இருந்த தொழில் வளங்களையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனித நேயமிக்க தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் இன்னொரு வடிவமாக இலண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை மையப்படுத்தி உதவித்திட்டங்களை மேற்கொண்டுவரும் திரு. கோபால் அவர்கள் பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் தையல்பயிற்சி நிலையங்களை உருவாக்கி தொழில்வாய்ப்பற்ற பெண்களுக்கும் போரினால் குடும்பத்தலைவனை இழந்து குடும்பத்தின் வாழ்வாதரத்தினை தாங்கி நிற்கும் பெண்களுக்கும் மாற்று வலு பயனாளிகளாக உள்ள பெண்களுக்கும் தொழில் ஆதாரத்தை வழங்கும் எண்ணத்தின் வெளிப்பாடாக இராமநாதபுரம் கல்மடுநகர் பிரதேசத்தில் சம்புக்குளம் நாவல்நகர் கல்மடுநகர் போன்ற கிராம பயனாளிகள் பயன் பெறும் வகையில் அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் தையல்பயிற்சி நிலையம் ஒன்றினை இன்று பாரளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் கிழக்கு அ. த. க பாடசாலை முதல்வர்திரு.புண்ணியமுர்த்தி தலைமையில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிரமமசேவையாளர் பரமதாஸ்இ சமுகஆர்வலர்களான நாவை. குகராசா சி. சிவச்செல்வன் வே. செல்லத்துரை போன்றவர்களுடன் கலமடுநகர் பிரதேசகிராமங்களை உள்ளடக்கிய கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மாதர்சங்க நிர்வாகிகள் தையல்பயிற்சி மாணவர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் உரையாற்றிய பா. உறுப்பினர் சி.சிறீதரன் புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோபால் அண்ணன் அவர்கள் கருணையுள்ளம் கொண்டவர் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை மையப்படுத்திய அவரது அறக்கட்டளை செயற்பாடுகள் பரந்த நன்மை பயக்கவல்லவை போரினால் ஏதிலிகளாக்கப்பட்ட எமது சின்னஞ்சிறார்களின் கல்வி எதிர்காலம் வளம்பெற நடாத்தப்படும் குருகுலம் சைவச்சிறார் இல்லத்தினுடைய கட்டட உருவாக்கங்களில் அவர் தற்போது பெரும்பங்களித்து வருகிறார் அது போலவே அகிலன் தையல் பயிற்சி நிலையமும் அமைகிறது இது எமது பெண்கள் தமது சொந்த கிராமங்களில் சொந்த காலில் தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கை ஒளி பெறுவதற்கு வரப்பிரசாதமாக அமைகிறது எதிர் காலத்தில் இத்திட்டம் இராமநாதபுரத்தின் பல மேம்பாடுகளுக்கு அடிப்படையாக அமையும் என்றார்.
இந்த தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவிற்கு வந்திருந்த மாதர் சங்க பிரதிநிதி சந்திரா கருத்துக் வெளியிடுகையில் இந்த தையல் பயிற்சி நிலையத்தினுடைய அடுத்த கட்டம் ஒரு ஆடைத்தொழிற்சாலையாக விரிவடைய வேண்டுமென்பதே எமது அவா கோபால் அண்ணன் இங்கு வரும்போது இந்த வேண்டுகோளைசமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் திட்டங்கள் அம்பாள்குளம் கிராஞ்சி போன்ற கிராமங்களிலும் தையல் பயிற்சி நிலையங்களாக உதயமாக இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.
» மஹரகமவில் தீ விபத்து! - புடவை வியாபார நிலையம் எரிந்து சேதம்
» யாழ்ப்பாண, கிளிநொச்சி உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு இடைக்கால தடை
» வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்
» உயர்தர பரீட்சை வர்த்தக பிரிவில் கிளிநொச்சி மாணவன் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum