அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மனித உரிமையாளர்கள் மீது திட்டமிட்ட பிரச்சாரம்! உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்

Go down

மனித உரிமையாளர்கள் மீது திட்டமிட்ட பிரச்சாரம்! உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்  Empty மனித உரிமையாளர்கள் மீது திட்டமிட்ட பிரச்சாரம்! உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்

Post by kaavalan Fri Feb 25, 2011 2:04 am

மிக அண்மைக்காலங்களில் சிறிலங்காவின் உள்நாட்டு சிங்களப் பத்திரிகையான “திவயின” விலும், வெளிநாடுகளில் இயங்கும் சில இணையத்தளங்களிலும், சில மனித உரிமையாளர்கள் “இன்ரபோல்” நிறுவனத்தினால் தேடப்படுவதாகவும் சில கட்டுரைகளும் செய்திகளும், வெளியாகியிருந்தன.
ஆனால் சர்வதேச போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சில சிறிலங்கா அரசின் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகளை இதே பத்திரிகையும் இணையத்தளங்களும் மூடிமறைத்து செய்திகள் வெளியிடுகின்றன.

இப்படியான பொய்யான பிரசார செய்திகளை வெளியிடுவதன் மூலம் தமது பத்திரிகைகளுக்கும், ஏற்கனவே தரமற்ற இணையத்தளங்களுக்கும் தாம் எவ்வளவு கேவலமான நிலையை உருவாக்குகிறோம் என்பதனை இவர்கள் அறியாதது மிகவும் கவலைக்குரியது.

சிறிலங்கா அரசிற்கு வக்காளத்து வாங்கும் இப் பத்திரிகைகளும், வெளிநாட்டில் இயங்கும் சில இணையத்தளங்களும், தமக்கு கைதேர்ந்த இழிவான செயல்கள் மூலம் தமது ஏஜமான்கள் யார் என்பதை காண்பிப்பது மட்டுமல்லாது, சர்வதேச விடயங்களில் தமது மட்டுப்படுத்தப்பட்ட அல்லது அறவே தமக்கு எந்த அறிவும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் உண்மையில் “இன்ரபோல்” என்ற சொற்பதத்தையே உச்சரிக்கவோ, அல்லது அது பற்றிய எந்த அறிவும் அற்றவர்கள்.

சிறிலங்கா ஜனாதிபதியும் வெளிநாட்டு அமைச்சரும், சர்வதேச அரங்குகளில் உரையாற்றும் வேளைகளில், பல்லின சமூதாயம் கொண்ட அமைப்பை தாம் உருவாக்க முன்வருவதாக கூறிக்கொள்ளும் அதேவேளை, இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இவர்களது மறைமுக ஆதரவு, சிறிலங்கா அரசின் உண்மை நிலைப்பாட்டை உலகுக்கு பறை சாற்றுகிறது.

மிக அபாண்டமான பொய்யான பிரசாரத்தை மேற்கொள்ளும் இப்பத்திரிகைகளும், இணையத்தளங்களும் மனித உரிமையாளர்களை ஓரம் கட்ட முனையும் அதேவேளை, சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைத் தகவல்கள் சர்வதேச ரீதியாக வெளிவராது தடுக்கவும் முனைகிறார்கள்.

சிறிலங்கா அரசும் அதனது கபடமான ஊழியர்களும் காடையர்களும் தொடர்ந்து எம்மை பயமுறுத்தினாலும், எமது உயிரைப் பங்கம் வைத்து தொடர்ந்து சிறிலங்காவின் உண்மை நிலைகளை வெளியில் தொடர்ந்து கொண்டுவருவோம் என்பதை இதன் மூலம் அறிவிக்க விரும்புகிறேன்.

“இன்ரபோல்” இப்படியான தரம் குறைந்த அரசு சார்பான ஊடகங்கள் மூலம் தமது அறிவித்தல்களை ஒரு பொழுதும் வெளியிடமாட்டார்கள் என்பதுடன், இவ் ஊடகங்கள் தமது நிதியை பெருக்குவதற்கு ஏதுவானாலும் செய்வதுடன், மனித உரிமை செயற்பாட்டாளர் பற்றிய செய்திகளை வெளியிடுவதன் மூலம், தமது இணையத்தளங்களுக்கு பிரசித்தி தேட முனைகிறார்கள்.

மனித உரிமையாளர்களை “இன்ரபோல்” தேடுவதாக வெளிவந்த செய்திகள் யாவும் எந்த ஆதாரமற்றதுடன், இவை சிறிலங்காவின் பிரசாரங்களுக்காக அரசிடமிருந்து ஊதியம் சன்மானம் பெறுவோரினால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள். இப்படியாக மனித உரிமையாளர்களை திட்டமிட்டமிட்ட பிரசாரம் மூலம் வஞ்சிப்பது உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்.

ஆகையால் இது பற்றிய விடயங்கள் யாவும், சர்வதேச ரீதியாக சகல நீதி நிர்வாக சட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்கிறோம் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.

கடந்த காலங்களில் என் மீதான இப்படியான திட்டமிட்ட சில நயவஞ்சக செய்திகளை, எனது சார்பாக சிறிலங்காவில் உள்ள சில வக்கீல்களும், வெளிநாடுகளில் சில வக்கீல்களும் சம்பந்தப்பட்ட சில பத்திரிகை நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமான பல கடிதங்கள் அனுப்பியிருந்தும், அவ் நிறுவனங்கள் எந்த கடிதங்களுக்கும் இன்றுவரை ஒரு பதிலையும் தர முன்வரவில்லை.

அதேவேளை எனது வக்கீல்கள் இவ்விடயமாக, சிறிலங்காவின் பத்திரிகைச் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இப்படியான திட்டமிட்ட பிரசார செய்திகள் மூலம் கடந்த 21 வருடங்களாக நான் பங்களித்து வரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமர்வுகளிலும், மற்றைய சர்வதேச மனித உரிமை அமர்வுகளில் எனது பங்களிப்பை தவிர்ப்பதற்கான முயற்சியாகவே இவை அமைகிறது என்பதை யாவரும் அறிவர்.

என்னைப் பொறுத்தவரையில் கடந்த 21 ஆண்டுகளாக மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருவதுடன், உலகில் நீதி சமாதானம் நிலவுவதற்கு உதவுவதையே நோக்கமாக கொண்டுள்ளேன். ஆகையால் நான் மற்றவர்களின் சொத்துக்களுக்கோ, பணத்திற்கோ ஆசைப்பட்டவனும் அல்ல! அதேபோல் மற்றவர்களின் சொத்துக்களுக்கு உரிமையோ பங்கோ கோருபவனும் அல்ல!.

அறிவுள்ள மனிதரும், விடயம் அறிந்த நிறுவனங்களும் சம்பந்தப்பட்டவர்களுடன் எந்த விடயங்களையும் கலந்து ஆராயாது தன்னிச்சையாக பிரசார நோக்குடன் பணத்திற்காக வெளியிடப்பட்ட அறிக்கைகள் பட்டியல்களுக்கு எந்தவித முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

ஆகையால் எமது பொன்னான நேரங்களை இவற்றில் செலவிடாது, மாறாக தொடர்ந்து திறமையான இன்னும் ஆதாரங்கள் அடங்கிய எமது மனித உரிமை வேலைகளை தொடர்வோம்.

விசுவலிங்கம் கிருபாகரன்
பொதுச் செயலாளர்
மனிதர் உரிமைகள் மையம்
பிரான்ஸ்
மின்அஞ்சல் : tchrgs@hotmail.com / tchrgs@tchr.bet
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு
» முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
» வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.
» ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?
» உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை ஆணையகத்தில் சரணடைந்த குடும்பஸ்தர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum