அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி

Go down

அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி  Empty அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி

Post by Admin Tue Mar 01, 2011 1:48 am

அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மூதூர் மல்லிகைத்தீவில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதே அவர் இப்படித் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வருகின்ற மாயை போன்ற ஒரு விடயம்தான். அபிவிருத்தி என்ற போர்வையில் நாங்கள் எங்கள் அடையாளங்களையும், உரிமைகளையும் இழந்து வருகிறோம். இதை எங்களை அறியாத வகையில் மாயையைக் கட்டி எழுப்பில இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தையும் சிங்கள அமைச்சர்களின் அரசியல் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாறாக அபிவிருத்தி என்பது எங்கள் உரிமையையும் அடையாளத்தையும் அழிக்கும் திட்டம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயம் தேசியம் சுய நிர்ணய உரிமை முதலிய எமது அடிப்படைகளை நாம் ஒரு பொழுதும் இழக்க அனுமதிக்க முடியாது. வரலாறு மாறும் காலத்தில் வாழும் நாம் எங்கள் உரிமைகளை பெறும் வகையில் நகர்வோம். காலச் சக்கரங்னகள் உருண்டு கொண்டிருக்கின்றன.

நாங்கள் நம்பியிருந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் எமது நம்பிக்கையும் ஒற்றுமையும் குறைந்து விடவில்லை என்பது முன்னால் இருக்கும் மக்களாகிய நீங்கள் தெளிவாக காட்டுகிறீர்கள். வடக்கு கிழக்கின் உள்ளுராட்சிகளை தமிழர்கள் ஒற்றுமையாக ஆண்டு உலகித்திற்கு நல்ல செய்தியை சொல்வோம் என்றும் சிறிதரன் எம்.பி அங்கு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் உள்ளுராட்சி வேட்பாளர் திருச்செல்வம் உட்பட்ட வேட்பாளர் குழுவினர், மாவை.சேனாதிராஜா, சுமந்திரன், வீ.ஆனந்தசங்கரி முதலியவர்கள் கலந்து கொண்டார்கள்.

வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர் - திருமலை நகரில் சிறிதரன்

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் திருமலை எங்களது தலைநகர் என்றார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். வடக்கு கிழக்கு இணையும் திருமலையில் இந்த உறுதியை மீண்டும் எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார். திருமலை நகரில் சிவன் கோயிலில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இப்படித் தெரிவித்தார்.

இழந்த உயிர்களுக்காகவும் சிந்திய இரத்தத்திற்காகவும் சந்தித்த இன்னல்களுக்காகவும் நாம் விடுதலை பெற்றாக வேண்டும். இழந்த உயிர்களுக்கு பூவைக் கூட போட முடியாத சிறைப்பட்ட சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அன்னையின் அஸ்தியைக் கூட அள்ளி எறியும் அரசு எங்களுக்கு எதைத் தரப்போகிறது என்று இங்கு திருமலை மண்ணின் மகன் ஒருவர் குமுறுகிறார்.

திருமலை மெல்ல மெல்ல கபளீகரம் செய்யப்படும் சூழலில் நிலங்களை நாம் இழந்து வரும் நிலையில் இந்தத் தேர்தலை நாங்கள் சரியாக எதிர்கொண்டு எங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகத் தீர்வு எங்களுக்கு வேண்டும். நாங்கள் தமிழர்களாகவும் அவர்கள் சிங்களவர்களாகவும் வாழ வேண்டும்.

இந்தியாவுடன் அல்லது இலங்கை அரசுடன் இந்த நிலையிலேயே எமது பேச்சுக்கள் அமைய வேண்டும். தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து நாங்கள் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, முன்னாள் எம்.பி துரைரட்ணசிங்கம் முதலியோர் கலந்து கொண்டனர்.

அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி  IMG_6171அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி  IMG_6176அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி  IMG_6203
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி
» கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரி அறவீடு செய்வதனால் வடக்கு மக்கள் பாதிப்பு – சிறிதரன்
» புதுக்குடியிருப்பு மக்களுக்கு “வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum